பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொல்காப்பியம் - பொருளதிகாரம் پلیس ۳

சூள் பேணான் பொய் தான் மலை, ' (கலி. 4 1)

சூளைப் பொய்த்தானென்பதே கூறவேண்டும் பொருள். அதன்புறத்தே இங்ங்னம் பொய்த்தான்மலையகத்து நீர்திகழ்வா னென்னென இறைச்சிப்பொருள் தோன்றியவாறு காண்க. பிறவு மன்ன. (கூடு)

ஆய்வுரை :

இது, தான் கருதியபொருளைக் குறிப்பின் உணர்த்தும் உரையாடற்பகுதியாகிய இறைச்சியின் இலக்கணங் கூறுகின்றது.

(இ - ள்) இறைச்சியாவது வெளிப்படக் கூறப் பட்ட உரிப் பொருளின் புறத்ததாகித தோன்றும் குறிப்புப் பொருள். எ-று.

இத்தகைய குறிப்புப்பொருள் வெளிப்படக்கூறப்பட்ட உரிப் பொருளின் புறத்தே தங்கித் தோன்றுதலின் இறைச்சியென்னும் பெயருடையதாயிற்று. இறுத்தல் - தங்குதல். நாட்டிற்கும் ஊர்க்கும் நீர்த்துறைக்கும் அடைமொழியாகிவரும் கருப்பொருள் நிகழ்ச்சிக ளாற்புலப்படத் தோன்றும் குறிப்புப்பொருளே "இறைச்சி’ என வழங்கப்படும் என்பது இளம்பூரணர் முதலிய பண்டைய உரை யாசிரியர்களின் கருத்தாகும்.

'இறைச்சிதானே பொருட்புறத்ததுவே என்பது நச்சினார்க் கினியர் கொண்ட பாடமாகும் கூறவேண்டுவதோர் பொருளின் புறத்தே புலப்பட்டு அதற்கு உபகாரப்படும் பொருட்டன்மையுடை யது இறைச்சி' என்பதும், வடநூலார் கூறும் இதனை நேயம்’ ான்ற பெயரால் வழங்குதலும் பொருந்து மென்பதும், நச்சினார்க் கினியர் கருத்தாகும். புதல் வற்பயந்த பூங்குழல் மடந்தை பரத் தையிற் பிரிந்துவந்த தலைவ னொடு புலந்துரைப்பதாக அமைந்தது,

'ஒல்லேங் குவளைப் புலா அல், மகன் மார் பிற்

புல்லெருக்கங் கண்ணி நறிது’’

1. சூள் பொய்த்தான் என்பது புலப்படச் சொல்லவேண்டியபொருள். சூள் பேனான் பொய்த்தானது மலை விளங்குகின்ற அருவி.கீரையுடையதாயிற்று என்று கூறப்பட்ட பொருளின் புறத்தே இவ்வாறு சூள் பொய்த்தான் மலையில் மழைபெய்தல் கூடாதே. இம்மலையில் அருவி நீர் விளங்குதல் எவ்வாறு? என்னும் குறிப்புப் பொருள் தோன்றியவாறு காணலாம்.