பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*巫组》 தொல்காப்பியம் . பொருளதிகாரம்

மகனோடு ஒன்றுமாறு என்னெனக்கவன்ற தோழிக்கு உடன் போதற் குறிப்பினளாய்த் தலைமகள் கூறியதாகலின், இதனுட் பொருகளி றென்றமையால் தலைமகள்தமர் தலைமகன் வரைவிற் குடன்படு வாரும் மறுப்பாருமாகி மாறுபட்ட தென்பது தோற்றுகின்றது. பொருகளிறு மிதித்த வேங்கை யென்ற தனாற் பொருகின்ற விரண்டுகளிற்றினும் மிதிப்ப தொன்றாகலின் வரைவுடன்படா தார் தலைமகனை யலமதித்தவாறு காட்டிற்று வேங்கை நின்று கொய்ய மலரும்' என்றதனாள் முன்பு ஏறிப்பறித்தல் வேண்டுவது இப்பொழுது நின்று பறிக்கலாயிற்று என்னும் பொருள்பட்டது. இதனானே பண்டு நமக்கரியனாகிய தலைமகன் தன்னை யவமதிக்க வும் நமக்கெளியனாகி யருள் செய்கின்றானெனப் பொருள் கொளக் கிடந்தவாறு காண்க. (க.கி.)

நச்சினார்க்கினியம் :

இஃது, எய்தியது இகந்துபடாமற் காத்தது.

(இ - ள்.) இறைச்சியிற் பிறக்கும் பொருளுமார் உளவே கருப்பொருள் பிறிதோர் பொருட்கு உபகாரப்படும் பொருட் டாதலேயன்றி அக் கருப்பொருடன்னுள்ளே தோன்றும் பொரு ளும் உள; திறத்து இயல் மருங்கில் அஃது உள்ளுறையுவமத் தின் கூற்றிலே அடங்குமாறுபோல நடக்குமிடத்து தெரியு மோர்க்கு அவ்வுள்ளுறையுவமமன்று இஃது இறைச்சி யென்று ஆராய்ந்துணரும் நல்லறிவுடையோர்க்கு (எ-று ):

கன்று தன் பயமுலை மாந்த முன்றில் தினை பிடி யுண்ணும் பெருங்கல் நாட கெட்டிடத் துவந்த உதவி கட்டில்

1. மலையில் ஒழுகும் அருவிரோகிய கருப்பொருள். சூள் பேணாது பொய்த்த தலைவனது கொடுமையினைப் புலப்படுத்தற்கு உபகாரப்படும் நிலையில் அமைக்தது, மேற்குறித்த பொருட்புறத்ததாகிய இறைச்சிப்பொருளாகும். இவ்வாறு கருப் பொருள் மற்றொரு குறிப்புப் பொருளை யுணர்தற்கு உபகாரப்படும் அவ்வளவில் அமைந்து விடாது அக்கருப்பொருளினுள்ளேயே தோன்றும் இறைச்சிப்பொருளும் உள்ளன. அஃது உள்ளுறையுவமத்தின் பகுதியிலே அடங்குமாறுபோன்று கடக்கும் கிலையினைப் பகுத்துணரும் நுண்ணறிவுடையார்க்கு இங்ஙனம் கருப்பொருளினுள். ளே கருதியுணரப்படும் இறைச்சியும், கருப்பொருள் நிகழ்ச்சியினையே உவமை யாகக் கொண்டுவரும் உள்ளுறையுவமமும் தம்முள் வேறாதல், நன்கு புலனாம் என்பது இந்நூற்பாவுக்கு கச்சினார்க்கினியர் கொண்ட பொருளாகம்.