பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் - நூற்பா கூடு " es i.

ஆய்வுரை :

இஃது இறைச்சிக்கு எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுகின்றது.

(இ - ள்) உரிப்பொருட்புறத்ததாய் வரும் கருப்பொருள் நிகழ்ச்சியாகிய இறைச்சி யினுள்ளே தோன்றும் பிறிதோர் குறிப்புப் பொருள் அமைவனவும் உள. அங்கனம் கூறப்படும் பொருட் கூறுபாட்டோடும் இயைபும் பகுதியினை ஆராயந்து ண ரவல்ல லார்க்கு (அப்பொருள் இனிது புலனாம்) எ- று

எனவே முற் கூறியவாறு உரிப்பொருட்புறத்தாகித் தோன்றும் கருப்பொருள் நிகழ்ச்சியாகிய இறைச்சியும் அவ்விறைச்சியி னுள்ளே தோன்றும் பிறிதொரு குறிப்பும் என இறைச்சியினாற் சுட்டப்படும் பொருள் இருவகைப்படும் என்றாராயிற்று. இறைச் சியிற் பிறக்கும் குறிப்புப் பொருளுக்கும உள்ளுறையுவமையால் உணர்த்தப்படும் உள்ளுறைப்பொருளுக்கும் இடையேயமைந்த நுண்ணிய வேறுபாட்டினையுணர்ந்து இஃது இறைச்சி, இஃது உள்ளுறையுவமை எனப் பிரித்துணர்தல் மேற்கூறும் உள்ளுரை வகை இயலும் பக்கத்தினைக் கூறுபடத் தெளிந்துணர்ந்தார்க் கின்றி ஏனையோர்க்கு இனிது விளங்காது என்பார், திறத்தியல் மருங்கின் தெளியுமோர்க்கே’ என்றார் தொல்காப்பியனார் .

கூறும் பொருள்களைச் சுட்டிய உவமப்பகுதியாய் கின்று அவற்றோடு ஒத்த பொருள்களை யுய்த் துணர் தற்குத் துணை செய்தல் வேண்டும். .

2. தான் ஈன்ற பார்ப்பினையே தின் னும் அன்பில்லாத முதலைகளோடு வெண்ணிறப் பூவினையும் ஒருங்கே யுடைய பொய்கையினையுடையது அத்தலை வனது ஊர்' என்னும் பொருளுடைய ஐங்குறுநூற்றுப் பாடல், பொய்கையில் வாழும் அன்பில்லாத முதலையின் செய்கை தலைவனது கொடுமைக்கும் பொய். கையிலுள்ள வெண்பூ தலைவனோடு உடன் பழகியும் அவனது கொடுமையினை யுணராத வெண்மையறிவினளாகிய தலைவியின் பேதைமைக்கும் ஒப்ப உவமங் கொள்ளும் கிலையில் அமைந்தமையால் உள்ளுறையுவமமாயிற்று. இவ்வாறு வரும் உள்ளுறையுவமத்திற்கும் மேற்குறித்தவாறு இறைச்சியிற் பிறக்கும் பொருளுக்கும் இடையேயமைந்த நுண்ணிதாகிய வேறுபாடுணர்ந்து இஃது உள்ளுறையுவமம், இது வேறொருபொருள் பயந்து கின்ற இறைச்சி எனப் பகுத்துணர வல்லார்க்கே இறைச்சியிற் பிறக்கும் பொருள் இனிது புலனாம் என்பார் . திறத் தியல் மருங்கின் தெரியுமோர்க்கே என்றார் தொல்காப்பியனார். இறைச்சியிற் பிறக்கும் பொருளும்' என்புழி உம்மை முன்னர்க்குறித்த பொருட்புறத்ததாகிய இறைச்சிப் பொருளேயன் றிக் கருப்பொருளினுள்ளே தோன்றும் பொருளும் உள்’ எனப்பொருள் தந்து கிற்றலின் இறந்தது தழீஇய எச்சவும்மையாகும்.