பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

静『5み。 தொல்காப்பியம் . பொருளதிகாரம்

உஉன. அன்புறு தகுவன இறைச்சியிற் சுட்டலும்

வன்புறை யாகும் வருந்திய பொழுதே.

இளம்பூரணம் :

என்பது சூத்திரம்.

என் - எனின். இது இறைச்சிப்பொருளாற் படுவதோர் பொருள் உணர்த்திற்று.

(இ. ள்.) அன்புறுதற்குத் தகுவன இறைச்சிப் பொருட்கண் சுட்டுதலும் வற்புறுத்தலாம் என்றவாறு. உம்மை இறந்தது

சழி இயிற்று.

'அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையாற்

கடியவே கணங்குழாஅய் காடென்றார் அக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னிரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவும் உரைத்தனரே...' ( கலி. க.க)

என்றது வற்புறுத்தற் குறிப்பு. (ங்க)

நச்சினார்க்கினியம் :

இஃது, இறைச்சி முற்கூறியவற்றின் வேறுபட வருமென் கின்றது, r

( இ-ள்.) வருந்திய பொழுதே - பிரிவாற்றாத காலத்து; இறைச்சியுள் அன்புறு தகுந சுட்டலும் . தோழி கருப்பொருள்களுள் தலைவன் அன்பு செய்தற்குத் தகுவனவற்றைக் கருதிக் கூறலும்: வன்புறை ஆகும்-வன்புறுத்தலாகும் (எ-று.)

'நசைபெரி துடையர் நல்கலும் நல்குவர்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழியவர் சென்ற வாறே.’’ (குறுந் 37) 1. இறைச்சியிற் பிறிதொரு பொருள்பயப்பக் கூறுதலேயன்றிப் பிரிவால்

வருந்திய நிலைமைக்கண் அன்புறுதகு சுட்டலும் உண்டு என்றமையால் சுட்டலம்' என் புழி 'உம்மை இறந்ததுதழி இயிற்று என்றார்.