பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல் நூற்பா ங்சு ாகடு

இதனுண் முன்பே நெஞ்சகத்தன்புடையார் அதன் மேலே களிறு தன் பிடியின் பெரும்பசி களைதற்கு மென்றோலையுடைய ஆச்சாவைப் பிளந்து அந் நாரைப் பொளித்துட்டும் அன்பினை யுடைய அவர் சென்ற ஆறதனைக் காண்பர்காண் என்று அன் புறு தகுந கூறிப் பிரிவாற்றாதவளை வற்புறுத்தவாறு காண்க: தம்மேல் இயற்கையாக அன்பிலனென்று ஆற்றாளாவளென்று கருதாது இவளை ஆற்றுவித்தற் பொருட்டு இவ்வாறு கூறலின் வழுவாயமைந்தது.

'அரிதாய வறன்’ (கலி.11) என்பது தோழி கூற்றன்மை உணர்க. . (கள்)

ஆய்வுரை :

இதுவும் அது.

(இ - ள்) காதலர் இருவரிடையே அன்பு மீதுார்தற்குக் காரணமாகிய செயல்களை இறைச்சிப்பொருளிற் சுட்டிக் கூறு தலும் தலைமகள் பரிவால் வருந்திய நிலைமைக்கண் வற்புறுத்துங் குறிப்பினதாகும்.

தலைவன் வினை வயிற் பிரிந்தானாகத் தலைமகள் பிரிவாற் றாது வருந்தியபொழுது அவளை ஆற்றுவிக்குங் கடமையுடைய ளாகிய தோழி தலைமகன் செல்லும் வழியிடையே விலங்கு பறவை முதலிய கருப்பொருள் தத்தம் துணையுடன் சாதற்கேண். மையுடையனவாக அன்பு, மீதுரரும் கருப்பொருள் நிகழ்ச்சியினை யெடுத்துக் கூறுதல் பிரிந்து சென்ற தலைவர் அந்நிகழ்ச்சியைக் கண்டு விரைந்து வருவார் எனத் தலைவியை வற்புறுத்துங் குறிப் பினையுடையதாகும் என்பதாம்.

= ----

1. இந்நூற்பாவுக்கு அரிதாயவறன்’ என்னும் கலியிலுள்ள அடிதாங்குமலி வின்றி என்ற தாழிசையை உதாரணமாக எடுத்துக்காட்டினார் இளம்பூரணர். இக்கலித் தொகை தலைவியின் கூற்றாகும். தலைவனது, பிரிவால் தலைவி வருங். தின பொழுது அன்புறுதகு இறைச்சியுட் சுட்டித் தலைவர் விரைவில் வருவார் என வற்புறுத்தற்குரியவள் தோழியேயாதலின் தோழி கூற்றினையே இங்கு உதார, ணமாகக் காட்டுதல் வேண்டும் என்பது கச்சினார்க்கினியர் கருத்தாதலின், இளம் பூரணர் காட்டிய 'அரிதாயவறன்' (கலி-11) என்பது தோழி கற்றன்மை யுனர் க" என க்குறித்தார்.