பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


R & 3- தொல்காப்பியம் - பொருளதிகாரம்

உ.உ.அ. செய்பொரு ளச்சமும் வினை.வயிற் பிரிவும்

மெய்பெற உணர்த்துங் கிழவிபா ராட்டே.

இளம்பூரணம் :

என்-எனின். இது தலைமகட்குரியதோர் இயல்புணர்த்து. தல் நுதலிற்று ’

(இ ள்.) தலைமகன் பொருள்வயிற் பிரியு மிடத்து ஆறின் னாமையா னுளதாகிய அச்சமும் வினை வயிற் பிரியுங் காலத்தி னுந் தலைவியைப் பாராட்டிப் பிரிதலினால், அப்பாராட்டினான் மெய்பெறவுணரும் என்றவாறு.

'நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந் தாம்

அஞ்சியது ஆங்கே அனங்காகும் என்னுஞ் சொல் இன்றிங் கிளவியாய் வாய் மன்ற நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட யானும்

இதுவொன் றுடைத்தென எண்ணி , ' : ) Es3, a_سی(

என்றமையாற் பாராட்டினால் தலைமகள் பிரிவு உணர்ந்த வாறு அறிக. (க.எ)

நக்கினார்க்கினியம்:

இது, தலைவன் தலைவியைப் பாராட்டிய வழி வருவதோர் வழுவமைக்கின்றது.

1. கிழவி, தன்னைத்தலைமகன் பாராட்டிய பாராட்டினால் செய்பொருளச் சமும் வினை வயிற் பிரிவும் மெய்பெறவுணரும் என இயைத் துரைக்கும் முறையில் இளம்பூரணர் உரை அமைந்திருத்தலால் மெய்பெறவுணரும் என்பதே அவர்

கொண்ட பாடமாகும்.

2. தலைமகன் தலைவியைப் பாராட்டிய பாராட்டினால் செய்பொருளச் சமும் வினை வயிற் பிரிவும் கிழவிபுணரும்’ எனப்பொருள் கொண்டமையால், இது தலைமகட்குரியதோர் இயல்புணர்த்துதல் துதலிற்று எனக் கருத்துரை வரைந்தார் இளம் பூரணர். செய்பொருள் அச்சமாவது, தலைவன் பொருள் தேடப் பிரியுமிடத் து வழியிடையே நேரும் வருத்தங்களை கினை தலால் தலைவியின் மனத்தே தோன்றும் அச்சம். வினை வயிற் பிரிவாவது, பகைவரைப் போரில் வென்றடக்குதல் குறித்தும்

டுகாத்தற்பொருட்டும் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லுதல்.