பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல் - நூற்பா டன ரீ'ஆர

(இ - ள்.) கிழவி பாராட்டே - தலைவன் தலைவியைப் பாராட்டிய பாராட்டு : செப்பொருள் அச்சமும்-யாஞ் செய்யக் சுருதிய பொருட்கு இவள் இடையூறாவள்கொலென்று தலைவன் அஞ்சிய அச்சத்தையும் ; வினைவயின் பிரிவும் - தான் பொருள் செய்தற்குப் பிரிகின்றதனையும் மெய் பெற உணர்த்தும் . ஒரு தலையாகத் தலைவிக்கு உணர்த்தும் (எ- று.)"

அப் பாராட்டுக் கிழவியதாகலிற் கிழவி பாராட்டென்றார்.

"நுண்ணெழின் மாமை’’ (கலி, 5) என்பதனுட் கழிபெரு நல்கலால் தலைவன் செய்பொருட்கஞ்சியவாறும் அவன் பிரியக் கருதியது உந் தலைவியுணர்ந்தாள் அப் பாராட்டினாலென்றுணர்க.

அன்பானன்றிப் பொருள் காரணத்தாற். பாராட்டினமை யானும் அதனைச் செவ்வனங் கொள்ளாது பிறழக் கோடலானும்: இருவர்க்கும் வழுவாமென்றமைத்தார். (க.அ)

ஆய்வுரை :

இது, மேற்குறித்த இறைச்சிப்பொருள் போன்று குறிப்பிற் பொருள்புலப்படுத்தும் பிறிது மோர் நிகழ்ச்சியும் உண்டென் கின்றது.

(இ - ள்) தலைமகள் தன்னைத் தலைவன் பாராட்டிய பாராட்டினால் தான் பிரிந்துசென்று செய்யக்கருதிய பொருளுக் குத் தலைமகள் இடையூராவாள்கொல்லோ எனத் தலைமகன் அஞ்சிய அச்சத்தினையும் தலைமகன் வினை வயிற் பிரிந்துசெல்ல விருப்பதனையும் குறிப்பினால் உணர்வாள் எ-று.

1. கிழவிபாராட்டு, செய்பொருளச்சமும் வினை வயிற் பிரிவும் மெய்பெற வுணர்த்தும். கிழவி-தலைவி. கிழவிபாராட்டு-தலைவியைத் தலைவன் பாராட்டிய பாராட்டுரை. செய்பொருள் அச்சம் என்றது, தலைவன் தான் பிரிந்துசென்று பொருளிட்டுதற்குத் தலைவி தடை செய்வாளோ எனத்தன் உள்ளத்திற்கொண்ட அச்சமாகும். மெய்பெறவுணர்த்தலாவது தெளிவாகப் புலப்படுத்தல்.

2. கழிபெருகல்கல்-தலைவியின்பால் தலைவன் செய்த அளவின் மிக்க தலையளி.

8. செவ்வனங் கொள்ளாமை-யாவது இயல்பாக கிகழ்ந்த பாராட்டெனக்

கொள்ளாமை,

4. பிறழக்கோடல்-மாறுபடக் கொள்ளுதல்.