பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ாகஅ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

கிழவி (தலைவனது) பாராட்டினால் செய்பொருளச்சமும் வினை வயிற்பிரிவும் உணரும் என இயையும்.

இனி, மெய்பெறவுணர்த்தும் எனப்பாடங்கொண்டு, இனி, சிகிழவி பாராட்டு. என்பதனை எழுவாயாக்கி, கிழவிபாராட்டு செய்பொருளச்சத்தினையும் வினை வயிற் பிரிவினையும் மெய்பெற வுணர்த்தும் எனப் பொருள் வரைந்தார். நச்சினார்க்கினியர். கிழவிபாராட்டு-தலைவன் தலைவியைப் பாராட்டிய பாராட்டு.

தலைவன் தலைமகளைப் பாராட்டியபாராட்டு அவன் உள்ளத்தேயுள்ள அச்சத்தினையும் அவனது பிரிவினையும் தலை

மகள் உணரும்படி செய்தமையின் இத்தகைய பாராட்டும் இரைச்சி போன்று குறிப்புப் பொருளுடையதாதல் காணலாம்,

உஉசு. கற்புவழிப் பட்டவள் பரத்தையை ஏத்தினும்

உள்ளத் தூட லுண்டென மொழிப

இளம்பூரணம் :

என் -எனின். இதுவும் அது, !

(இ-ள்) கற்புக் காரணமாகத் தலைமகனது பரத்தைமைக் குடன்பட்டாளே யாயினும், உள்ளத்தின் சுண் ஊடல் நிகழும் என்ற்வாறு." - }FL یہ (

நச்சினார்க்கினியம் :

இது, தலைவிக்கட் டோன்றியதோர் வழுவமைக்கின்றது. (இ-ள். கற்புவழிப்பட்டவள் - கற்பின் வழிநின்ற தலைவி:

பரத்தை ஏத்தினும் - பரத்தையைப் புகழ்ந்து கூறினாளாயினும்:

1. இதுவும் தலைமகட்குரியதோர் இயல்புணர்த்துதல் நுதலிற்று என்பதாம்.

2. தற்கொண்டானாகிய கணவனைப் பேணிப் போற்றுதலாகிய கற்பொ. ழுக்கம் காரணமாகத் தலைவி தலைமகனது புறத்தொழுக்கிற்கு உடன்பட்டா ளாயினும் தலைவனது பரத்தை மை காரணமாகத் தலைவியின் உள்ளத்திலே கடல் நிகழ்தல் உறுதி என்பதாம்.