பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் நூற்பா கூக 高T9_务

றாகலின் உள்ளத்துாடல் நிகழ்பவை வேண்டும். தோழி கூறுங்கால் தலைவியரைக் கூறப்பெறாளென்ப்து உம் பரத்தையரைக் கூறின் அவர்க்கு முதுக்குறைமை கூறிக் கூறுவளென்பது உங் கொள்க.

'கண்டிகுமல்லமோ கொண்கநின் கேளே.

ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினவு வோளே.'

(ஐங்குறு. 122) இது. தலைவன் வரையக் கருதினாளோர் தலை, வியை இணையளெனக் கூறி அவள்மாட்டு இவன் எத்தன்மைய னென்று விதுப்புற்றுக் கூறியது. இது தலைவன் கூற உணராது தான் வேறொன்று கூறி அவன் குறிப்பு அறியக் கருதுதலின் வழு வாயமைந்தது. இது கைக்கிளைப்பொருட்கண் வழுவமைக்கின்றது."

ஆய்வுரை :

இதுவும் ஒர் உரையாடலில் தோன்றும் குறிப்புணர்த்து கின்றது.

(இ - ள்) தலைவி, தன் தலைவனால் விரும்பப்பெற்றவள் எனத் தான் ஐயுற்ற மற்றொருத்தியைக் குறித்து இவள் இத் தன்மையள்’ எனத் தலைவனுக்கு எடுத்துரைக்கு முகமாக 'அவு எளிடத்தில் இவன் எத்தன்மையனாகவுள்ளான்” எனத் தலைவனது உள்ளக்குறிப்பினைத் தான் உணர்தற்கும் உரியள் எ-று.

உங்க. தம்முறு விழுமம் பரத்தையர் கூறினும் மெய்ம்மை யாக அவர்வயி னுணர்ந்தும் தலைத்தாட் கழறல்தம் எதிர்ப்பொழு தின்றே மலிதலும் ஊடலுல் அவையலங் கடையே

இளம் பூரணம் :

என்-எனின். இது தலைமகட்குரியதோர் மரபுணர்த்திற்று.

1. கண்டிடுமல்லமோ (ஐங்குறு. 122) என்ற பாடல் காமாஞ்சாலா இளை யோனைத் தலைவன் விரும்பிய குறிப்பினைப் புலப்படுத்தலின் இது கைக்கிளைப் பொருண்மைக்கண் வந்த வழுவமைதியாயிற்று.