பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to slo. தோல்காப்பியம் - பொருளியல்

(இ - ள்.) பரத்தையர் தாமுற்ற துன்பத்தினைத் தலை மகட்குக் கூறி பவழியும் அவரிடத்துத் துன்பத்தை மெய்ம்மையாக உணர்ந்துவைத்துந் தலைமகன்மாட்டுக் கழறுதல் தலைவன் எதிர்ப் பட்டபொழுது இல்லை, மகிழ்ச்சியும் புலவியும் அல்லாத காலத்து என்றவாறு.

கூறினும் என்ற உம்மை எதிர்மறை கூறாமை பெரும் பான்மை. அதனை ஐ பப்சிடாது துணி லான் மெய்ம்மை யாக வென்றார். அதனைத் தலைமகன் வந்த வழிக் கூறுவாளாயின் தனக் குப் புணர்ச்சியிற் காதலில்லையாம். சொல்லாளாயின் அவள் கூறிய வதனாற் பயனில்லையாம். அதனைக் கலவியிறுதியினும் புலவியினும் கூறப்பெறும் என்றவாறு .'

'தின்னணங் குற்றவர் நீசெய்யும் கொடுமைகள்

என்னுழை வந்துநொந் துரையாமற் பெறுகற்பின்.'

(கலி என)

எனப் புலவியிற் கூறியவாறு காண்க.

கலவியிறுதியிற் கூறுதல் வந்தவழிக் காண்க. (சல்)

1. தலைவனால் பரத்தையர் தாம் உற்ற வருத்தத்தைத் தலைவியிடம் வந்து கூறுதல் அரிது என் பார், “தம்முறு விழு 0 ம் பரத்தையர் கூறினும் என்றார். 'கூறினும் என் புழி உம்மை எதிர்மறையாதலாற் கூறாமையே பெரும்பான்மை என்பதாம். அங்ஙனம் பரத்தையர் தன் கண்வந்து தலைவனது குற்றங் கூறினா ராயி. லும் அதனை ஐயப்படாது மெய்ம்மையாகத் துணிந்த வழியே அதுபற்றித் தலை வனிடம் தலைவி வினவுதல் வேண்டும் என் பார் "மெய்மையாக அவர் வயின் உணர்ந்தும்' என்றார். பரத்தையர் தலைவனைப் பற்றித் தன்கட்கூறிய குற்றத் தினைத் தலைவன் வந்த அப்பொழுதே தலைவி கூறுவாளாயின் தலைவனை க் கட்டி மகிழ்தலில் அவட்குக் காதல் இல்லை என்ற கிலையேற்படும். பரத்தைய ர் கூறியதனைத் தலைவனிடம் சொல்லாமலே விட்டு விடுவாளாயின் பரத்தையர் தா முற்ற துன்பத்தைத் தலைவியிடம் சொன்ன தனால் ஒரு பயனும் இல்லையாம். , அன்றியும் தன் பாற் குறையிரக்தா ரது துன்பத்தை நீக்கும் அருட்பண்பில்லாதவள் தலைவி என்னும் இகழ்ச்சியுமுளதாகும். எனவே தலைவி பரத்தையர் കുഞ്ഞഖഞങ്ങ് குறித்துத் தன் பால் வந்து கூறிய துயரத்தினைத் தான் தலைவனொடு கூடி மகிழும் புணர்ச்சியின் இறுதியினும் தலைவனொடு தானுற்ற புலவிக்காலத்தும் கூறப்பெறும் என்பது இச்சூத்திரத்தின் பயனாகும் என இளம்பூரணர் தரும் இவ்விளக்கம் தலைமக் களாகிய காதலரிருவரது வாழ்க்கையில் அமைதற்குரிய உள்ளப்பண்பினை கன்கு புலப்படுத்துதல் உணர்ந்து மகிழத்தகுவதாகும்.