பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிஉச தொல்காப்பியம் - பொருளதிகாரம்

ஆய்வுரை :

இது, மனைவாழ்க்கையில் தலைமகட்குரியதோர் திறம் உணர்த்துகின்றது.

(இ. ள்) தலைவனால் தாம் உற்ற துனபத்தினைப் பரத் தையர் தன்பால் வத்து கூறிய நிலை பிலும், தான் அவர்களது துன் பத்தினை உண்மையாகவே உணர்ந்தநிலையிலும் தலைமகள் தலை வனுடன் மகிழ்ச்சியும் புலவியும் ஆகிய காலத்தன்றித் தலைவன் தன்னை எதிர்ப்பட்டபொழுது முன்னிலையில் நின்று இடித்துரைத் தல் இல்லை. எ-று.

தலைவனுடன் தான் அன்பினாற் கலந்து அளவளாவும் மகிழ்ச்சிக்காலததில் அம்மகிழ்ச்சியொடு கூட்டித் தலைவன் முறை களைக் கூறி இடித்துரைத்தலும், தலைவன்ப்ால் தவறு கண்டு தள்ன் புலக்குங்காலத்து அத்தவறுகளோடு பரத்தையர் உற்ற குறைகளையும் ஒருங்கே கூறி இடித்துரைத்தலும் நுண்ணுணிர் வுடைய தலைமகளின் இயல்புகளாம் என அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது இச்சூத்திரமாகும். மகிழ்ச்சியும் புலவியும் ஆகிய இவ்விருநிலையும் அல்லாத ஏனைக்காலங்களில் தலைவன்ை முன்னின்று கழறுதல், தற்கொண்டாற்பேணித் தகைசான்ற சொற்காக்குந் தலைவியின் கடமைக்கு ஊறுவிளைப்பதா கலின் அங்கனம் இடித்துரைத்தல் கூடாதெனத் தொல்காப்பியனார் விலக்கிய திறம் உணர்ந்து மகிழத் தக்கதாகும்.

உங்.உ. பொழுது தலைவைத்த கையறு காலை இறந்த போலக் கிளக்குங் கிளவி - மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு அவைநாற் பொருட்கண் நிகழும் என்ப.:

இளம்பூரணம் :

என்-எனின். இது பருவம் வந்துழித் தலைமகட் குரியதோர் வழுக்காத்தலை துதலிற்று.

(இ - ள்.) பொழுது தலைவைத்த லாவது - யாதானு

1. பொழுது-குறித்த பருவகாலம். தலைவைத்தல்-தொடங்குதல். இறத். தல்-கடத்தல். மடன்-அறியாமை. மருட்கை-மயக்கம்.