பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் - நூற்பா சக {് ു. ♔

மொரு பருவத்தைக் குறித்தவழி யப்பருவம் இருதிங்களை யெல்லை யாகவுடைத் தாயினும் அது தோற்றியவழி என்றவாறு.

கையறு காலை என்பது - இது கண்டு செயலற்றகாலை என்றவாறு.

இறந்தபோலக் கிளத்த லாவது - அக்காலந் தோன்றிய பொழுது கழிந்தது போலக் கூறுதல்.

மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு அவை நாற்பொருட் கண் நிகழும் என்ப என்பது-அவ்வாறு கூறுதல் அறியாமையான தால் வருத்தத்தானாதல் மயக்கத் தானாதல் அக்காலத்திற் குரிய பொருள் மிகத் தோன்றுதலான rதல் என இந்நான்கு பொருளா னும் நிகழும் என்றவாறு.'

சிறுபொழுதாயின் யாமங் கழிவதன் முன்னர்க் கூறுதல்.” எனவே, இவ்வாறு வருஞ் செய்யுள் காலம் பிழைத்துக் கூறுகின்ற தல்ல. என்றவாறு.

பொருகடல் வண்ணன் புனை மார்பில் தார்போல் திருவில் விலங்கூன்றித் தீம் பெயல் தாழ வருது மெனமொழிந்தார் வாரார்கொல் வானம் கருவிருந்து ஆலிக்கும் போழ்து" (கார்நாற். க)

இது பருவங்கண்டவழி வாரார்கொல் என்றமையால் இறந்த போலக் கிளந்தவறாயிற்று. பிறவு மன்ன. இதுவு மோர் மரபு வழுவமைத்தல் ? . (சக)

1. அப்பருவகாலங் தொடங்கிய பொழுதிலேயே முடிவுற்றதாகக் கூறுதல் அறியா ை பாலாவது வருத்தத் தாலாவது மயக்கத் தாலாவது அக் காலத்திற்குரிய பொருள்மிகுந்து தோன்றுதலாவது என இக்கான்கு பொருளாலும் கிகழும் .

2. இனிப், பொழுது என்பதற்கு ஒரு காளின் எட்பிரிவாகிய சிறுபொழுது எனக்கொண்டு, இறந்தபோலக்கிளத்தல்’ என்பதற்கு, குறித்தயாமம் கழிவதற்கு முன் அது கழிக்ததாகக் கூறுதல்’ எனப் பொருளுரைத்தலும் பொருந்தும் என்ப

தாம்.

3. இவ்வாறு கூறுதல் காலமயக்கமாகிய சொல்வழுவன்றென்பதும், தலை மகனது பிரிவினால் செயலற்ற நிலையில் தலைவியாற் கூறப்பட்டுவருதலின் இது மரபு வழுவமைதியாகக் கொள்ளப்படும் என்பதும் இளம்பூரணர் கருத்தாகும்.