பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Μη Είύ தொல்காப்பியம் பொருளதிகாரம்

யவன்' என்னுத் துணையுந் தான் செய்ததனை வியவாமையின் மருட்கை யிறந்தவாறும், நெய் தன் மலரன்ன கண்னெனத் தன் வனப்பு மிகுதி கூறலின் மிகுதி யிறந்தவாறுங் காண்க. எல்லிரா நல்கிய கேள்வனி வனெனவே கந்தருவத்தின் வழுவிப் பெருந்திணை நிகழ்ந்தவாறும் பின்னர் வரைவு நிகழ்ந்தவாறுங் காண்க. இதற்குப் பொருளுரைக்குங்காற். கேட்பீராக இவள் நக்கு. நக்க அப்பொழுதே யழும். இங்கனம் அழுமாறு காமத்தை ஊழானது அகற்றலின் அஃதறுதியாக நரம்பினும் பயனின்றாயிருந்தது. ஒஒ இதனையுற்ற இவள் அல்லற்பண்பைப் பாராதே அழித யாங் குறுகினோம். குறுகி யாம் இதனை முடிவு போகக் காண்பேமென்று வந்து எல்லீரும் என்செய்தீர்? என்னை யிகழ்கின்றீரோ? இவ் வருத்தத்தை எனக்குறுத்தின வனது மாயஞ் செய்த மலர்ந்த மார்பை யான் முயங்கிக் கூடினும் இகழ்ச்சியன்றாம் என்றற்றொடக்கமாய் வரும் . ) از سی تیتو

ஆய்வுரை :

இது, பிரிந்து சென்ற தலைவன் தான் வருவதாகக் குறித்த பருவந் தொடங்கிய நிலையில் தலைமகட்குளதாவதோர் இயல்பு

கூறுகின்றது.

(இ - ள்) வினை வயிற் பிரிந்த தலைவன் தான் மீண்டுவரு வதாகக் குறித்த பருவம் தொடங்கினமையால்(தலைவி) செயலற்று இரங்குதற்குரிய காலததிலே குறித்த அப்பருவம் வந்து முடிவுற்றது போலக் கருதிக் கூறும் சொல் மடன் வருத்தம் மருட்கை மிகுதி யென்னும் அவை நான்கு பொருட்கண்ணும் நிகழும் என்று கூறுவர் ஆசிரியர் எ-று.

இங்குப் பொழுது என்றது. ஒராண்டுக்குரிய அறுவகைப் பெரும்பொழுதுகளில் இரு திங்களையெல்லையாகவுடைய பருவத் தினை. தலைவைத்தல்-தொடங்குதல். கையறுகாலை (தலை வன் குறித்த பருவத்தில் வாராமையையெண்ணிச்) செயலற்று இரங்குதற்குரிய காலம். இரத்தல் -கடத்தல் வந்து கழிதல். மடன்-அறியாமை. வருத்தம்-துயரம் மருட்கை-வியப்பு. மிகுதி-அப்பருவ காலத்திற்குரிய பொருள்கள் மிகுந்து காணப் படுதல்,