பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொல்காப்பியம் - பொருளதிகாரம்

(இ-ள்.) இரந்து குறையுற்ற கிழவனை- இரந்து கொண்டு தன் காரியத்தினைக் கூறுதலுற்ற தலைவனை ; தோழி நிரம்ப நீக்கி நிறுத்தலன்றியும்’- தோழி அகற்றுற ஏத்து முறைமையில் தாழ்வின்றாக அகற்றி நிறுத் தலேயன்றியும்; வாய்மை கூறலும். துமது கூட்டத்தினை யான் முன்னே அறிவலென மெய்யாகக் கூறலையும்; பொய் தலைப் பெய்தலு - அப் புணர்ச்சி பில்லை யென்று பொய்த்த துணைத் தலைவன்மேற் பொய்யுரை பெய் துரைத் தலையும் அவன் வரைந்து கோடற்பொருட்டுச் இல் பொய்களைக் கூற வேண்டுமி டங்களிலே பெய்துரைத் தலையும்; நல்வகையுடைய நயத்திற் கூறியும். நல்ல கூறுபாடுடைய சொற் களை அசதியாடிக் கூறியும் : பல்வகையானும் படைக்கவும் பெறுமே. இக் கூறியவாறன்றி வேறுபடப் புனைந்துரைக்கவும் பெறும் (எ-று.)

தோழி நீக்கலன்றியுங் கூறலையுந் தலைப்பெய்தலையும் படைக்கவும் பெறும். பல்வகையானும் படைக்கவும் பெறுமென வினை முடிக்க. தோழி தலைவனோடு நயங்கருதுமாற்றால் அவனை நீக்குதல் ஏனையவற்றோடெண்ணாது அன்றியுமெனப் பகுத்துரைத்தார். ஏனைக்குறை முடித் தற்கு இடையூறின்மை கூறியனவும் வரைவு கடாய்க் கூறியனவுமாம்.

'நெருநலு முன்னா ளெல்லையு......

& # ....................................மகளே.

இது சேட்படுத்தது.

'எமக்கிவை யுரையன் மாதோ துமக்கியான்

யாரா கியரோ பெரும வாருயிர் ஒருவிர் ஒருவிர்க் காகி முன்னாள் இருவீர் மன்னும் இசைந்தனிச் அதனால் அயலே னாகிய யான் முயலேன் போல்வனி மொழிபொருட் டிறத்தே."

1. குறையுறுதலாவது, தான் கருதிவந்த காரியத்தைக் கூறுதல்.

2. கிரம்ப க்ேகி கிறுத்தல்ாவது இரந்து குறையுறவந்த தலைவன் தன் பால் அணுகி கில்லாது கெடுந்துாரத்தே அகன்று நிற்குமாறு சேட்படுத்தல்.

8. அசதியாடிக் கூறலாவது, எளளல் இளமை பேதமை மடம் காரணமாக ககைச்சுவை தோன்றக் கூறுதல்,