பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#「五 デ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

துறைவகையாம். இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதனா . னமைக்க. இவை நாடகவழக்காகவும் உலகியல் வழக்காகவும் புனைந்துரைத் தமையானுந் தோழி தலைவற்குக் கூறத்தகாதன கூறலானும் வழுவமைந்தது. (சங்)

ஆய்வுரை :

இது, களவுக்காலத்தில் தோழிக்கு உரியதோர் திறம் உணர்த்துகின்றது.

(இ-ள்) தோழி தன்பால் இரந்து குறையுற்று நிற்குந் தலைவனை மிகுதியும் சேய்மையிடத்தினனாக நீக கி நிறுத்து த - லோடு அவனுக்கு உண்மைநிலையினை யெடுத்துரைத்த லும் பொய்ம்மை யொடு விரவிய சொற்களைக் கூறுதலும் நன்மைக் கூறுபாடுடைய நயவுரைகளைக் கூறுதலும் இவ்வாறு பலவகை . யானும் படைத்து மொழிதலையும் தன் திறமாகக் கொள்ளப். பெறுவாள். எ-று ,

நிரம்ப நீக்கி நிறுத்தலாவது, தன்னை அணுகிநின்று இரந்து குறையுற்ற தலைவனைத் தம் சுற்றத்தார் எதிர்ப்படாதவாறு அச்சக்கிளவியால் தன்னை அணுகாது நெடுந் தூரம் அகன்று நிற்கும்படி சேட்படநிறுத்தல். வாய்மை கூறல் என்பது நிகழ்வன கூறுதல். பொய்தலைப்பெய்தலாவது, உண்மை நிகழ்ச்சியுடன் நிகழாததனையும் கூட்டிக் கூறுதல். நல்வகையுடைய என்றது, நன்மைத் திறம் வாய்ந்த பொருள்களை. நயத்திற் கூறலாவது கேட்டோர் விரும்பியேற்றுக்கொள்ளும் படி இன்சொற்களால் எடுத்துரைத்தல். 'பல்வகையா னும் படைக்கவும் பெறும்’ என்றது, உள்ளதனை உள்ளவாறு கூறுதலேயன்றி இவ்வாறு இல்லது கூறிப் படைத்து மொழியவும் பெறும்’ எனப் பொருள் தந்து நிற்றலின் படைக்கவும் என்புழி உம்மை இறந்தது.தழி இய எச்சவும்மையாகும்.

உகூச. உயர்மொழிக் கிளவி உறழுங் கிளவி

ஐயக் கிளவி ஆடுஉவிற் குரித்தே.

இளம்பூரணம் :

என்-எனின் தலைமகற்குந் தலைமகட்கும் உரியதோரி மரபு உணர்த்துதல் நுதலிற்று.