பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


町五、 தொல்காப்பியம் - பொருளதிகாரம்

மறங்கொ ளிரும்புலி' (கலி, 42) என்னுங் குறிஞ்சிக் கலியுள் ,

'ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ ஒர்வுற றொருதிற மொல்காத நேர்கோல் அறம்புரி நெஞ்சத் தவன்' (கலி 4:2)

எனத தலைவி கூறலும்,

"தண்ணறுங் கோங்க மலர்ந்த வரையெல்லாம்

பொன்னணி யானைபோல் தோன்றுமே நம் மருளாக் கொன்னாளன் நாட்டுமலை’ (கலி. 42)

எனத் தோழி உறழ்ந்து கூறியவாறு காண்க. இதுவுந் தலைவி கூற்றிற்கு மாறாதலின் வழுவாய்ச் சிறைப்புறமாகக் கேட்டு வரைதல் பயனாதலின் அமைந்தது.

சொல்லின் மறாதீவாண் மன்னோ விவள் (கலி. 61)

எனவு ங்,

' கூறுவங் கொல்லோ கூறலங் கொல்லெனக்

கரந்த காமங் கைந்நிறுக் கல்லாது' (அகம். 198)

எனவும் ஐயக்கிளவி தலைவற்குரிய வாய் வந்தன.

இனி ஐயப்பாடு தலைவிக்குமுரித்தென்றாற் சிறந்துழி யையும்’ (தொல். பொ. 94) என்பதற்கு மாறாம்.

அவன் மறை தேஎம் நோக்கி மற்றிவன் மகனே தோழியென்றனன்' (அகம். 48)

என்பதனை ஐயத்துக்கண் தெய்வமென்று துணிந்தாளெனின் அதனைப் பேராசிரியர் தாமே மறுத்தவாறு காண்க. ' (ச)

1. ஐயம் என்பது, ஒரு பொருள் மேலே இருபொருட்டன் மைகருதிவரும் மனத் தடுமாற்றம். ஐயுற்றுக்கூறும் கூற்று தலைவனுக்கன்றித் தலைவிக்கு இல்லை. அகநானு று 48-ஆம் பாடலில் அவன் மறை தேளம் நோக்கி மகனே தோழி’ எனத் தலைவி வியந்து உயர்த்துக் கூறியதன்றி ஐயுற்றுக் கூறினாலல்லள் அங். வனம் ஐயுற்றவள் அவனைத் தெய்வமென்று துணிந்தாளெனின் தலைவிக்கு

அச்சமேயன்றிக் காமக்குறிப்பு கிகழாதாம்.