பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல் - நூற்பா சச :: இ கி.

ஆய்வுரை :

இது தலைவனுக்கும் தலைவிக்கும் உரியதோர் சொல்வகையுணர்த்துகின்றது.

f இ - ள்) வியந்து உயர்த்துச் சொல்லுதற்குரிய சொல், தலைவன் தலைவி ஆகிய இருபாலார்க் கும் ஒத்த சொல்வகை . "ாகும். ஐயுறறுக் கூறு தற்குரிய சொல் தலைமகனுக்குரியது. எ. று.

உயர் மொழிக் கிளவியாவது, காதலர் இருவரும் ஒருவரை யொருவர் எதிர்ப்பட்ட முதற் காட்சியில் ஒருவரையொருவர் வியந்து நோக்கித் தம்மினும் உயர்ந்தாராக உயர்த்துக் கூறும் சொல்லாகும் . ஐயக் கிளவியாவது, 'இவர் மக்களினத் தாரோ அன்றித் தெய்வமோ, எனத் தம்மினும் மேலாயினா ரோடு வைத்து எண்ணி ஐயுற்றுக் கூறுஞ் சொல். ஆடு உ-ஆண்மகன்; என்றது தலைவனை .

உங்டு. உறுகண் ஒம்பல் தன்னியல் பாகலின்

உரிய தாகும் தோழிகண் உரனே.

இளம்பூரணம் :

என்-எனின். இது தோழிக்குரியதோர் மரபுவழுக் காத்தலை நுதலிற்று.

( இ-ள்.) தலைமகற் குற்ற துன்பம் பரிகரித்தல் தோழி இயல்பாகலின் அவட்குரியதாகும் அறிவு என்றவாறு.

'ஐயத்துக் கண்தெய்வமென்று துணிந்தாளெனின் அதனைப் பேராசிரியர் தாமே மறுத்தவாறு காண்க என வரும் இவ்வுரைத்தொடர், தொல்காப்பியம் பொருளியலாகிய இப்பகுதிக்குப் பேராசிரியர் உரை வரைந்துள்ளார் என்பதனை பும் அவ்வுரையுள் உயர்மொழிக்குரிய உதாரணமாக 48-ஆம் அகப்பாடல் காட்டப் பெற்றிருந்ததென்பதனையும் அதனை அதன் கண் உள்ள 'மகனே' என்பதனை உயர் மொழிக்குரிய கிளவியாகக் கொள்ளாது ஜயக்கிளவியாகக் கொள்ளுதலைப் பேராசிரியர் மறுத்துள்ளார் என்பதனையும் புலப்படுத்துதல் காணலாம். அகம் 48-ஆம் பாடலில் வரும் 'மகனே' என்பதனை உயர் மொழிக்குரிய கிளவியாகவே இளம்பூரணர் கொண்டுள்ள்மையும் இங்கு நினைத்தற்குரியதாகும்.

1. தலைமகட்குற்ற துன்பம் பரிகரித்தல் தோழியியல்பாக லின் என்றிருத்தல் பொருத்தமாகும்.

உரன் - அறிவு,