பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் நூற்பா க g了

பட்டு இசைப்பினும் பொருளாகக்கொள்ளப்படுமெனவும், இப் பொருளதிகாரத்தில் முன்னர்க் கூறிய பொருளிற் பிறழ்ந்திசைப் பனவும் பொருளாகக் கொள்ளப்படும் எனவும் அமைத்து, இவ் வாறு சொல்லுணர்த்தும் பொருளும் தொடர்மொழியுணர்த்தும் பொருளும் ஒருங்கே கூறலிற் பொருளியல் என்றார் என்பர் நச்சினார்க்கினியர். இப்பொருளியலிற் கூறப்பட்டனயாவும் சொற் பொருளின் வழுவமைதியும் பொருளின் வழுவமைதியும் என இரு பகுதிப்படுமென்பதும். புறத்திணையியலுட் புறத்தினை வழுக்கூறி அகப்பொருட்குரிய வழுவே இவ்வியலிற் கூறுகின்றதென்பதும் நச்சினார்க்கினியர் கருத்தாகும்.

அகப்பொருளொழுகலாற்றில், தலைவன், தலைவி தோழி முதலியோர் உரையாடுதற்குரிய சொற்பொருள் அமைதியினையும் அவருடைய உரையாடல்களில் அமைதற்குரிய பொருள் வகை யினையும் சிறப்புமுறையில் விரித்துக் கூறுவது இப்பொருளியல் எனக் கருதுதல் பொருந்தும். இவ்வியலிலுள்ள சூததிரங்கள் 52 ஆக இளம்பூரணரு ரையிலும் 54-ஆக நச்சினார்க் கினியருரையி லும் பகுத்து உரை வரையப்பெற்றுள்ளன. இளம்பூரணர் உரையுள அன்பேயரனே’ என்னும் முதற்குறிப்புடைய சூத்திரம் ஏடெழுதுவோர் பிழையால விடுபட்டதாயினும் அதற்குரிய உரை யின் குறைப்பகுதி காணப்புடுதலால் அவர்கருத்துப்படி பொருளி யற் சூத்திரங்கள் 53 எனக்கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.

முதற் சூத்திரமாகிய இது, தொடர் மொழிகள் தம்முள் வேறு பட்டனவாகச் சொல்வகையால் திரிந்துவரினும் பொருளில் வேறு படாது இயைதல் உண்டு என்கின்றது.

(இ.ள) சொற்கள் தம்முள் தொடர்வுபடும் வாய்பாட்டால் தொடர்ந்து நில்லாது பிறிதோர் வாய்பாட்டால் தொடர்ந்து நிற்பி னும் சொல்லக்கருதிய பொருள் இயைபுபெறப் புலப்படும். அந் நிலையிற் சொற்களுக்கு உறுப்பாகிய அசைச்சொற்கள் ஆசிரிந்து ஒலியா என்று கூறுவர் புலவர் எ-று.

இசை சொல., என்றது. தொடர் மொழிகளை திரிந்து இசைத் தலாவது தொடர்ந்து பொருள்கொள்ளுதற்கேற்ற ஒத்த வாய்பாடுகளாக அமைதலின்ரி வேறுவேறு தொடர் மொழிக ளாகக் கூறப்படுதல், அசை- மொழிக்கு உறுப்புக்களாகிய விகுதி

முதலியன .