பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் நூற்பா சசு T ఢా?

(இ -ஸ் ) காதலர் இருவரையும் மக்களின் மேற்படவுயர்ந்த தெய்வமாக வுயர்த்துக கூறும் மொழியும் மேற்குறித்த தோழியாகிய அவட்கு உரிய எ-று.

' உயர் மொழிக் கிளவியும் அவட்கு உரிய' என இயையும் ஆல்- அசை. அவள் என்னுளு சுட்டுப்பெயர் மேலைச் சூத்திரத்திற். கூறப்பட்ட தோழியைச் சுட்டிநின்றது.

" தாமரைக் கண் ணியை ............... நீவரின்

  • * * * * * * * * * * * * * * * * * * * * * * * * e к в 9 ф: 举事务*** ●看*** * *** * * - - * - -

அணங்கென அளுசுவர் சிறுகுடியோரே' (க.வி. ரு உ)

இது தலைவனைத் தெயவ மென உயர்த்துக் கூறியது.

  • எமக்கோர், கட்காண் கடவுளல்லளோ பெரும (பொருளியல். சூத். 75-மேற்கோள்) இது தலைவியைத் தெய்வமென உயர்த்துக் கூறியது. இவையிரண்டும் தோழி கூற்றாக அமைந்த உயர் மொழிக் கிளவிகளாகும்.

உங்.எ. வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல்

தாவின் றுரிய தத்தங் கூற்றே.

இளம்பூரணம் :

என்-எனின். வாயில்கட் குரியதோர் மரபு உணர்த்துதல் துதலிற்று.

இ - ள். தத்தங் கூறுபாட்டினான் வாயில்கள் கூறுங் கிளவி வெளிப்படக் கிளத்தல் கேடின்றி யுரிய வென்றவாறு.

தத்தங்கூறாவது அவரவர் சொல்லத்தகுங் கூறுபாடு. ஆனுருபு தொக்கு நின்றது. எனவே, வாயில்களல்லாத தலை

1. வாயிற்கிளவி-பார்ப்பான் பாங்கன் முதலிய வாயில்கள் கூறும் சொல்வகைகள்: தத்தம் கூற்று - தத்தமக்குரியவாகச் சொல்லத்தகும் கூறுபாடு. “தத்தம் கூற்றான் என ஆனுருபு விரித்துத் தத்தங் கூற்றான். வாயிற் கிளவி வெளிப்படக்கினத்தல் தாவின்று உரிய' என இயைத் துப் பொருள் வரைந்தரர் இளம் பூரணர்.

தா இன்றி - கேடின்றி.