பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் - நூற்பா சள ாரதி

இஃது, ஆற்றாமை வாயிலாகத் தலைவன் வந்துழித் தலைவி

வெளிப்படக் கூறியது. இது தோழிக்கும் உரித்து. .

எரியகைந் தன்ன தாமரை யிடையிடை

யார்ப்பினும் பெரிதே' (அகம் , 116)

இதனுள் 'நாணிலை மன்ற எனத் தோழி கூறி அலரா கின்றாலென வெளிப்படக் கிளத்தலின் வழுவாயமைந்தது.

'அகலநீ துறத்தலி னழுதோவா வுண்கணெம்

புதல்வனை மெய் தீண்டப் பொருந்துத லியைபவால் நினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின் தமர்பாடுந் துணங்கையு ளரவம் வந் தெடுப்புமே' (கலி. 70)

இது தலைவி கூற்று.

獻 *

உரிய வென்றதனால் தோழி வாயிலாகச் சென்றுழித் தலைவி வெளிப்படக் கூறுதலுங் கொள்க. அஃது 'இம்மை யுலகு' என்னும் (66) அகப்பாட்டினுட் காண்க.

இவை இங்ங்ணம் வெளிபடக் கிளத்தலின் வழுவாய் அமைந் தன. (Fesr)

ஆய்வுரை :

இது, கற்பியல் வாழ்க்கையில் வாயில்களாவார்க்குரியதோர் தி றம் உணர்த துகின்றது.

(இ-ள்) வாயில்களாவார் தாம் கூறுதற்குரிய கூற்றுக்களைத் தத் தமக்குரிய சொல்வகைகளில் வெளிப்படக்கூறுதல் வருத்த மின்றியுரிய எ. று,

வாயிற் கிளவி தத் தம் கூற்றே வெளிப்படக்கிளத்தல் உரிய என இயையும். வாயில்களாவார் தோழி முதல் கண் டோர் இறுதியாக மேற்கற்பியலிற் கூறப்பட்ட பன்னிருவர். அவருள் கற்பியல் வாழ்க கையில் வாயிலா தற்குரிய பாணர் முதலியோரைத் குறித்ததே இச்சூத்திரமெனக்கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.

உங்.அ. உடனுறை உவமம் சுட்டுநகை சிறப்பெனக்

கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே.