பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல் - நூற்பா சள ፱፻፰cØr

உவமம் என்பது உவமையைச் சொல்ல உவமிக்கப்படும் பொருள் தோன்றுவது.

'வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்

குறைபடுந்தேன் வேட்டும் குறுகும்-நிறைமதுச் சேர்ந்து உண்டாடும் தன்முகத்தே செவ்வி உடையதோர் வண்டா மரைப்பிரிந்த வண்டு.' (தண்டி. இக உரை) .

இது வண்டைக் கூறுவாள் போலத் தலைமகள் பரத்தையிற் பிரிவு கூறுதலின் உள்ளுறையுவமம் ஆயிற்று."

சுட்டு என்பது ஒரு பொருளைச் சுட்டிப் பிறிதோர் பொருட் படுதல்.

"தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி

அஃதாண் டவள்செய் தது." (குறள். கஉளக)

இதனுள் இப் பூப்பறிப்பேமாயின் வளைகழன்று தோள் மெலிய நடத்தல் வல்லையாக வேண்டும் என ஒருபொருள் சுட்டித் த ந்தமை காண்க.,

நகையாவது நகையினாற் பிறிதொரு பொருளுணர நிற்றல்.

  • அசையியற் குண்டாண்டோ ரேனர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்.' (குறள். க0கஅ)

இதனுள் நகையினாற் பிறிதோர் குறிப்புத் தோன்றியவாறு

1. உவமம்’ என்றது, இங்கு உள்ளுறையுவமையினை. இதன் இலக்கணம்

அகத்திணையியல் இல், நிக-ஆம் சூத்திரங்களில் விரித்துரைக்கப் பெற்றது.

2. இத்திருக்குறள் தலைமகள் குறிப்புக்கண்டு தலைமகனுக்குத் தோழி சொல்லியதாகும். தலைமகள் தன் தே கர்ல் அ விக்த தோள்வளையை முதலில் நோக்கி அதன் பின் தன் மெல்லி: தே, ளை .பும் கே க் ப்ே பின் தன் அடியையும் நோக்கித் தன் குறிப்புப் புலப்படச் செய்தா ள் என வகு இத்திருக்குறளில், தலைவர் பரியின் இத். தொடி தோளில் கில்லா, தோளும் மெலி:பும். இவ்விரண்டும் நிகழாமல் என்பாதங்க. ளாகிய விேர் தலைவரொடு உடன் செல்லுதற்கு முங் நுதல் வேண்டும் என உடன் போதற் குறிப்பினைப் புலப்படுத்தும் கிலையில் அமைவது எனத் தலைமகளது கிலை மையினை ச் சுட்டிக் கூறுக்திறத்தால் அவள் கருதியது உடன் போக்கு எனப் பிறிதொரு பொருளையும் சுட்டித்தந்தமையின் இது சுட்டு என்னும் உள்ளு யாயிற்று.