பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல் நூற்பா அ ாடுக

இனி, உடனுறை யென்பது, நிலத்துடன் உறையுங் கருப் பொருளாற் பிறிதொரு பொருள் தோன்ற மறைத்துக கூறும் இறைச்சி. உவமமாவது அக் கருப்பொருளாற் கொள்ளும் உள்ளு ரையுவமும ஏனை புவமும். நகையும் சிறப்பும் பற்றாது ஒன்று நினைந்து ஒன்று கூறுதலும் அன்புறுதற்குத் தகுவனவற்றை இரைச்சியுட் சுட்டுதலும் சுட்டென்னும் உள்ளுறையாகும். நகைக் குறிப்புத் தோன்ற ஒன்று நினைந்து ஒன்று கூறுதல நகை யென்னும் உள்ளுறையாகும். உள்ளுறை யுவ மத்தைத் தரும் கருப் பொருட்கு ஏனையுவமம் அடை மொழியாய் நின்று சிறப்புக் கொடுத்து நிற்பது சிறப்பென்னும் உள்ளுறையாகும். இவை ஐந்தும். தான் சொல்லக் கருதிய பொருளை உள்ளுறையாகத் தன்னகத்துட்கொண்டு அதனை வெளிப்படக் கூறாது மறைத்துக கூறுதலின உளளுரையெனப்பட்டன என்பது நச்சினார்க்கினியர் தரும விளக்கமாகும்.

இங்குக் கூறப்பட்ட உள்ளுறை ஐந்தனுள் உடனுறை என்பது இறைச்சியையும் உவமம் என்பது உள்ளுறையுவமத் தினையும் சுட்டு என்பது அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டுதலையும குறித்தன எனக் கொள ளு தவே பொருத தமுடையதாகும். நகைக் குறிப்புத் தோன்ற ஒன்று நினைந்து ஒன்று கூறுதல் நகை என்னும் உள்ளு ரையாகும் என நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் ஏற்புடைய தேயாகும். உடனுறைக்கும் நகைக்கும் இளம்பூரணர் தரும் விளக்கமும் எடுததுக்காட்டும் குறித த அவ்வந் நிகழ்ச்சிக்கு மட்டுமின்றி ஏனையவற்றிற்குச் செல்லா மையின் அவற்றை உள்ளுறைககுரிய வகையாகக் கொள ளு தற்கு இயலவில்லை. இளம்பூரணர் சுட்டென்னும் உள்ளுறைக்கு எடு ததுக் காட்டிய தொடிநோக்கி’ (1279) என வரும திருக்குறள் குறிப்பறிவுறுத்தல்' என்ற தலைப்பில் தலைமகள் குறிப்பினை வெளியிட்டுரைப்பதாக லின் அதனை மறைத்துக் கூறும் உள்ளுறை வகையாகக் கொள்ளுதற்கியலவில்லை. இனிச் சிறப்பென்னும் உள்ளுறைக்கு இளம்பூரணருரையில் எடுத்துக்காட்டு எதுவும் காணப்பெறாமை. யால் நச்சினார்க் கினியர் தரும் விளக்கததினையே இப்போதைக்கு ஏற்புடையதாகக் கொளளலாம்.

உங்க. அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம்

தன்வயின் வருதலும் வகுத்த பண்பே.