பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ாடுஉ தொல்காப்பியம் . பொருளதிகாரம்

இளப் பூரணம் :

என்-எனின். இதுவும் உள்ளுறைப் பாற்படுவதோர் பொருள் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ஸ்.) அந்தமிலாத சிறப்பினாகிய வின்பத்திடத்து உள்ளுறைப் பொருண்மை வருதலும் வகுத்த இயல்பு என்றவாறு.

அந்தமில் சிறப்பு என்பது மேன்மேலுஞ் சிறப்புச் செய்தல்

துண் எழில் மாமைச் சுணங்கணி ஆகம் தம் கண்ணோடு தொடுத்தென நோக்கியும் அமையார் என் ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவர் எண்ணுவ தெவன்கொ வறியேன் என்னும்.’’ (கலி. ச)

என்ற வழி, இன்பத்தின் கண்ணும் பிறிதோர் பொருள் உண் டென்பது தோற்றுகின்றது." (ச.அ)

இது முற்கூறிய உள்ளுறைபற்றித் தலைவற்கு வருவேதோர் வழுவமைக்கின்றது.

( இ-ள்.) ஆக்கிய அந்தமில் சிறப்பின் இன்பமும்.முற் கூறிய உள்ளுறை ஐந்தானும் அவர்களுண்டாக்கிய முடிவிலாத

1. முடிவில்லாத சிறப்பினைச் செய்தலாலுளதாகிய இயன்பத்தின் கண்ணே உள்ளுறையாகப் பிறிதொரு பொருள் தோன்றுதலும் முன்வகுத் துரைக்கப்பட்ட உள்ளுறையின் இயல்பாகும் என்பது இச்சூத்திரத்திற்கு இளம்பூரணர் கண்ட போருளாகும்.

"அந்தமில்சிறப்பின் ஆகிய இன்பம் தன் வயின் (உள்ளுறை) வருதலும் வகுத்த பண்பே என மேலைச் சூத்திரத்திலுள்ள உள்ளுறை" என்பதனை அதிகாரத்தால் வருவித்துரைப்பர் இளம்பூரணர்.

2. தலைவன் தலைவியுடன் அன்பினாற் கலந்து அளவளாவி மகிழும் இன்ப நிலையிலே தலைவியின் பாற் பேரன் புடையனாய் அவன் மேன் மேலும் செய்த சிறப்பின் கண்ணே கடமை கருதித் தலைமகளைச் சிலகாள் பிரிக்திருக்கப்போகின் தோம் என்னும் பிரிதலுணர்வு தோன்றி தலைவர் செய்யும் இச்சிறப்பு கம்மைப் ரிேந்து செல்வதாயிருக்கும் எனத் தலைவியுணரும் வண்ணம் உள்ளுறை பொரு ை ய்க் கூறலன்றிச் செயலால் வெளிப்படுதலின் இதுவும் முற்கூறிய உள்ளுறை. ன்ே பாற் படுவதாயிற்று.

3. 'ஆகியலின் பம்' எனப்படங்கொண்டார் இளம்பூரணர்,