பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல் நூற்பா சக ாடுடு

(இ-ள்.) மங்கலமொழியும் தலைவற்குத் தீங்கு வருமென் றுட்கொண்டு தோழியுந் தலைவியும் அதற்கஞ்சி அவனை வழுத்து தலும்; வை இய மொழியும்' - தலைவன் தம்மை வஞ்சித்தானா கத் தலைவியுந் தோழியுங் கூறலும் ; வை இய மொழி : தீங்கை வைத்த மொழியுமாம்; மாறில் ஆண்மையிற் சொல்லிய மொழி. யும் மாறுபாடில்லாத ஆளுந்தன்மையிடத்தே பழிபடக் கூறிய மொழியும்; கூறியன் மருங்கிற் கொள்ளும் என்ப வழுவமைதி யாகக் கூறிய இலக்கணத்திடத்தே கொள்ளும்மொழி யென்று கூறுவர் ஆசிரியர் (எ-று.) "

  • நோயிலராக நங்காதலர்’ (அகம். 114) எனவுங் "காந்த ளுஞ் செய்வினை முடிக்கத் தோழி' எனவுங் கூறுவன நம்மை அறனன்றித் துறத்தலின் தீங்கு வருமென்றஞ்சி வாழ்த்தியது. நம் பொருட்டுத் தீங்கு வருமென நினைத்தலின் வழுவாயமைந்தது."

'வையினர் தலனுண்டார் வாராமை நினைத்தலின்'

(கலி, 134)

என்பது வஞ்சித்தமை கூறிற்று.

'இதுவுமோ-ரூராண்மைக்கொத்த படிறுடைத்து' (கலி,89) என்பது ஆண்மையிலே பழியுண்டு என்றது. இதுவும் வழி.இ அமைந்தன. (டு)}

ஆய்வுரை :

இது, தலைமகட்கு ஆகாதன எனப் பின்னர் (மெய்ப்

1. வைஇயமொழி' என்றது 'தலைவன் தம்மை வஞ்சித்தானாகக் கூறும் மொழியாகும். வைதல்-வஞ்சித்தல், 'வையினர் நலனுண்டார். (கலி: 184) என் புழி இச்சொல் இப்பொருளிற் பயிலுதல் காண்க, இனி வை இயமொழி என்பதற்குத் தீங்கைவைத்தமொழி அஃதாவது தலைவன் செய்த தீங்கினைக் குறித்த மொழி எனவும் பொருள் கொள்வர்.

2. இதுவும் ஒர் ஊராண்மைக்கொத்தபடி துடைத்து என்ற தொடர் தலை வனது ஆண்மையிலே பழியுண்டு (கலி, 89) என்றலின், தீங்கைவைத்தமொழியா) தலறிக

3. தோழியும் தலைவியும் கம்பொருட்டுத் தலைவற்குத் தீங்கு வருமென அஞ்சி வாழ்த்துதலும் தலைவன் வஞ்சனை செய்தான் என அவன் மேல் தீங்கி, னையேற்றிக் கூறலும் வழுவா.மேலும் அவன்பால் அன்புமிகுதியற் கூறியனவாத, வின் வழுவமைதியாக அமைத்துக்கொள்ளப்பெற்றன என்பது கச்சினார்க் கினியர்

கருத்தாகும்: