பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாடு.அ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

(பாடம்) திவ்விய.

இன்விழ வாயிற் றென்னும் இவளுரே.

தச்சினார்க்கினியம் :

இது, மெய்ப்பாட்டியலுள் ஆகாதென்பவற்றுட் சில அமைக

வென வழுவமைக்கின்றது. இது பொதுவாகக் கூறலின் தலைவிக் குந் தோழிக்குங் கொள்க."

( இ - ள். சினனே கோபம் நீடித்தலும், பேதைமைஏழ்மையும்; நிம்பிரி . பெறாமை தோன்றுங் குறிப்பும்: நல்குரவு - செல்வமின்மையும்; அனைநால்வகையும் - என்ற அத் தன்மையனவாகிய நாற்கூறும்; சிறப்பொடு வருமே - ஒரு பொருளைச் சிறப்பித்துக் கூறுதல் காரணத்தான் வரும் (எ-று.)

சினத்தை ஆண்டுக் கொடுமையினடக்கினார்.”

"நாணு நிறையும் நயப்பில் பிறப்பிலி.' (கலி. 60)

எனவும்,

  • தொடிய வெ மக்குநீ யாரை' (கலி. 88)

எனவுஞ் சினம்பற்றி வரினும் அவை தன் காதலைச் சிறபித்தலின் அமைந்தன.

செவ்விய தீவிய சொல்லி' (கலி, 19)

எனக் கழிபெருங் காதலான் நின்னை உள்ளவாறறிந்திலே னெனத் தன் பேதைமையைக் காதலாற் சிறப்பித்தலின் அ ைமந்தது.

1. மெய்ப்பாட்டியலுள் காமக்குறிப்பா காதன என விலக்கிய குற்றங்களுள் சினம், பேதைமை, கிம்பிரி என்னும் மூன்றுடன் அங்குச் சொல்லப்படாத கல் குரவும் ஆக இவை கான்கும் ஒருபொருளைச் சிறப்பித்தல் காரணமாகத் தோழி கூற்றிலும் தலைமகள் கூற்றிலும் பொதுவாக இடம்பெறுதலுண்டு என வழுவ ைமக்கும் கிலையில் அமைந்தது இச்சூத்திரமாகும்.

2. சினன்-சினம் என்பது கெடுங்காலம் நீட்டித்து கிற்கும் வெகுளியாகும் . இக்குற்றம் செயலளவிற் கொடுமையின் கண்ணும் சொல்லளவில் வன்சொல்லின் கண்ணும் அடங்கும். இங்குக் கூறிய பேதைமையும் மெய்ப்பாட்டியலிற்குறித்த ஏழைமையும் பொருளால் ஒன்றே. கிம்பிரி’ என்பது பொறாமை தேன்ாறுங் குறிப்பு என்பர் பேராசிரியர். வெறுப்பு என்பர் இளம்பூரணர்.