பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் நூற்பா இல் ாடுக

'உறலியா மொளிவாட வுயர்ந்தவன் விழவினுள்

விறலிழை யவரொடு விளையாடு வான் மன்னோ பெறலரும் பொழுதொடு பிறங்கிணர்த் துருத்திசூழ்ந் தறல்வாரும் வையையென் றறையுந ருளராயின்."

(கலி. 30}

இது நிம்பிரி; அவரோடும் விளையாடுவானெனப் பொறாமை கூறியும் அவன் ஈண்டையானாக வேண்டுமெனக் காதலைச் சிறப்

பித்தலின் அமைந்தது.

'பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்

விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப் புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் உண்ணென் றோக்குபு புடைப்பத் தெண்ணிர் முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற் றரிகரைக் கூந்தல் செம்முது செவிலியர். பரீஇமெலிந் தொழியப் பந்தர் ஓடி ஏவன் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி அறிவு மொழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுதுமறுத் துண்ணுஞ் சிறுமது கையளே.' (தற். 110)

இது, குடிவறனுற்றென நல்குரவு கூறியுங் காதலைச் சிறப் பித்தலின் அமைந்தது.

இது, மெய்ப்பாட்டியலுள் விலக்காமையின் அதனைச் சார ஈற்றிலே வைத்தார்.' (இக)

ஆய்வுரை :

இதுவும் மறைத்துரையாடலாகிய உள்ளுறைப்பாற்படும்.

1. காமக்குறிப்பு ஆகாதன இவையென விளக்கும் மெய்ப்பாட்டியற் சூத். திரத்துள் இங்குக் கூறப்பட்ட கல்குரவு இடம்பெறவில்லை எனினும் கல்குரவும் விலக்குதற்குரியதொன்றே என்னும் கருத்தில் இதனை மெய்ப்பாட்டியலைச்சார இவ்வியலின் ஈற்றிலே வைத்தார் தொல்காப்பியனார் என்பது கச்சினார்க்கினியர்

தரும் விளக்கமாகும்.