பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல் - நாற்பா திடீ *、

இனி, உம்மையாற் பிறவுமுள வென்பது பெறுதலின்,

'எந்தை தன் னுள்ளங் குறைபடாவாறு' (கலி 6 :)

என்றாற்போல் வருவன பிறவுங் கொள்க (இஉ)

ខ្សរ៏ទី២ៈ

இஃது அகத்தினைக்குரியோரால் வழங்கப்பெறும் சில முறைப்பெயர்கள் பற்றிய அமைதி கூறுகின்றது.

( இ- ள்) அகத்தினையொழுகலாற்றில் அன்புடையாரால் அன்னை , என்னை என வழங்கப்பெறும் சொல்வழக்குக்களும் உள்ளன. அவை சொல்வகையாலும் சொல்லிற்கு உறுப்பாகிய எழுத்து வகையாலும் பொருள் தோன ராத முறைமையினையுடை

யன. எ-து.

தாயைக் குறித்து வழங்கும் முறைப்பெயராகிய அன்னை என்ற பெயரால் தோழி தலைவியையும் தலைவி தோழியையும் அழைத்தலும் தமையனைக் குறித்த முறைப்பெயராகிய என்னை என்ற பெயரால் அவ்விருவரும் தலைவனை அழைத்தலும் அகத் தினைச் செய்யுட்களில் இடம்பெற்றுள்ளமை காண லாம். இச் சொல் வழக்குகள் சொல்லினாலும் அதற்குறுப்பாகிய ஈற்றெழுத் தினாலும் பொருள் விளங்காத முறைமையின. ஆயினும் வழக்குப் பயிற்சி கருதி இவற்றை வழுவமைதியாக அமைத்துக் கொள்ளு தல் தொன்று தொட்டு வரும் சொல்மரபு என்பது புலப்படுத்து வார் தொன்னெறி முறைமை சொல்லினும் எழுத்தினுந் தோன்றா மரபின என்மனார் புலவர் என்றார் தொல்காப்பியனார்.

உசா. ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா

கற்பும் ஏரும் எழிலும் என்றா சாயலும் நாணும் மடனும் என்றா நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு ஆவயின் வரூஉங் கிளவி எல்லாம்