பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொல்காப்பியம் - பொருளதிகாரம்

  • 岛°

நாட்டியல் மரபின் நெஞ்சுகொளின் அல்லது காட்ட லாகாப் பொருள என்ப.

இளம் ம்ரணம் :

என்-எனின். மேற் பொருட் பாகுபாடு முதல் கரு வுரிப் பொருளென உணர்த்தி அவற்றின் பாகுபாடு இத்துணையும் ஒதி னார். அவற்றுட் பாகுபடுத்திக் காட்டலாகா தன சில பொருள் கண்டு அவற்றைத் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று.

"நாட்டியமரபின்' என்பது நச்சினார்க்கினியர் உரையிற் கண்ட பாடம்.

(இ - ள்) ஒப்புமுதலாக நுகர்ச்சி யீறாக அவ்வழிவருஞ் சொல்லெல்லாம் நாடடின் வழங்குகின்ற மா பினானே பொருளை மனத்தினான் உணரினல்லது மாணாக்கர்க்கு இது பொருள் என வேறுபடுத்தி யாசிரியன் காட்ட்லாகாத பொருளையுடைய என்ற வாறு.

ஒப்பாவது - தந்தையையொக்கும் மகன் என்பது. அவ்விரு வர்க்கும் பிறப்பு வேறாயின வழி ஒப்பாகிய, பொருள், யாதென் றார்க்கு இதுவெனக் காட்டலாகாமையின், அவ்விருவரையுங் கண்டான் அவ்வொருவ ரொருவரை ஒக்குமது பிறைெருவன் மாட்டுக் காணாமையிற்றானே யப்பொருண்மைய்ை உண்ரும்

என்பது.

உரு என்பது-உட்கு. அது பயில த பொருளைக் கண்டுழி வருவதோர் மன நிகழ்ச்சி. இவருட்கினார் என்ற வழி மனத்தி னான் உணரக் கிடந்தது.

வெறுப்பு என்பது-செறிவு. அது அடக்கங்குறித்து நின்றது. ஆவரடக்கமுடையர் என்ற வழி அதுவும் மனத்தினான் உணரக் கிடந்தது.

கற்பு என்பது-மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மன நிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது.

1. காட்டு இயல்மரபாவது, உலக வழக்கில் உள் பொருள்களாக மக்களால்

மனத்திற் கொள்ளப்பட்டு காட்டில் வழங்கப்பெற்று வருதல்.