பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் நூற்பா டூஉ 浮爱莎?

10. நோயாவது நே:தல்.

11. வேட்கையாவது: பொருள் கண்மேல் தோன்றும் பற்றுள். ளம் செய்யுண் மருங்கின் வேட்கை (தொல்-எழுத்-உயிர் மயங். 86) என்புழி அவாவிற்கு வேறுபாடு கூறினோம்.

12. நுகர்வாவது : இன்பதுன்பங்களை து கருதுகர்ச்சி; என்றா வென்பன எண்ணிடைச் சொல்.

என்று வருங்கிளவி-ஒப்பு முதல் நுகர்வு ஈறாகப் பன்னிரண் டென்று அகப்பொருட்கண் வருங் கிளவிகளும்.

ஆவயின் வருங் கிளவி. அப் பன்னிரண்டின் கண்ணே புறப் பொருட் குரியவாய் அவ் வாசகத்தான் வருங் கிளவிகளும்.

ஆங்கு-ஈண்டு உவமவுருபு, அவை போல்வன கிளவி என். பதாம்.

எல்லாம் நாட்டிய மரபின் நெஞ்சுகொளின் அல்லதுஏனையவும் நாடக வழக்கத்தாற் புலனெறி வழக்கஞ்செய்த முறை மையானே நெஞ்சு உணர்ந்து கொள்ளினன்றி;

காட்டலாகப் பொருள என்ப . உலகியல் வழக்கான் ஒரு வர்க்கொருவர் கட்புலனாகக் காட்டப்படாத பொருளைப் பொரு னாகவுடைய என்று கூறுவர் புலவர் (எ று.)

இவை மேல்வரும் மெய்ப்பாடுபற்றி உணர்தலிற் கட்புல னாகாவோவெனின், மெய்ப்பாடாவது மனக்குறிப்பாதலின் அதன் குறிப்பிற்குப் பற்றுக்கோடாகிய பொருளினவை யென்றுணர்க.

இனி, இவை புறப்பொருட்கண் வருமாறு :

'வரைபுரையு மழகளிற் றின் மிசை" (புறம், 38) எனவும் , 'உருகெழு முரசம்' (புறம் 50) எனவும், 'வெறுத்த கேள்வி

1. பொருளினவை, என்பதனைப் பொருளின் ன வை’ என த்திருத்திக் கொள்க. காட்டிய மரபின் கெஞ்சுகொள்ளலாவது கருத்துப்பொருளாகிய நிலையிற். பொறிகட்குப்புலனாகாத இவற்றை நாடகவழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறிவழக்கின் துணைகொண்டு கற்போர் உள்ளத்திற் காட்சிப்பொருள் போன்று பதியுமாறு சொல்லோவியம் செய்து காட்டுதல்,