பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல் நூற்பா உ ః _

அறிவும் புலனும் வேறுபட நிறீஇ உவமவாயிந்படுத்தற்குச் செய்யுள்:

'ஒங்கெழிற் கொம்பர் நடுவி தெனப்புல்லும் காந்தட்கிவருங் கருவிளம் பூக்கொள்ளும் மாந்தளிர்க் கையில் தடவரு மாமயில் பூம்பொழில் நோக்கிப் புகுவன பின்செல்லும் தோளெனச் சென்ற துளங்கொளி வேய் தொடும் நீள் கதுப் பிஃதென நீரற் றறல்புகும் வாளொளி முல்லை முகையை முறுவலென்று ஆள்வலி மிக்கான் அஃதறி கல்லான்.”

இவை, இடையுங் கையு முதலாகிய உறுப்புக்களைப் பற்றிய உவம வாயிற்படுத்தறியும் அறிவையும் அறியப்படும் பொருளையும் வேறுபட நிறுத்தி உவமம் பொருந்தியவழிக் கூறியவாறு காண்க. வேயைத் தோள் போலுமென்னாது தோளென்று தொட்டமை யால் அறியப்படும் பொருள் வேறுபட்டது. அதனைத் திரியக் காண்டலால் அறிவு வேறுபட்டது. பித்துங்களியும் போல் முலை யெனச் சென்று வேயைத்தொடும் என்னாது தோளெனச் சென்று வேயைத் தொட்டமையால் உவமம் ஒன்றியவழி உவமவாயிற் படுத்தது. {ല.) நச்சினார்க்கினியம் :

இது, முற்கூறிய இருவகையானும் பொருள் வேறுபட்டு வழிஇ யமையுமாறு கூறுகின்றது.

(இ - ள். நோயும் இன்பமும் இருவகை நிலையிற் காமம் கண்ணிய மரபிடை தெரிய - துன்பமும் இன்பமுமாகிய இரண்டு. நிலைக்களத்துங் காமங் கருதின வரலாற்று முறைமையிடம் விளங்க; எட்டன் பகுதியும் விளங்க நகை முதலிய மெய்ப்பாடு எட்டனுடைய கூறுபாடுந் தோன்ற அறிவும் புலனும் வேறு பட நிறீஇ இருபெயர் மூன்றும் உரியவாக - மனவறிவும்

1. இருபெயர் மூன்றும் உரியவாதல் என்றது, அஃறிணையில் ஒன்றன் பால் பலவின்பாலாகிய இருபாலின் கண்ணும் உயர்திணைக்குரிய ஆண்பால் பெண்பால் பலர்பால் ஆகிய மூன்று வகைப்பொருள்களும் பொருங்த அமைதல்... என்றது 'நெஞ்சு என்னும் அஃறிணையொருமை தலைவன் நெஞ்சாக அமையும் போது அதனை உயர்தினை ஆண்பாலாகவும் தலைவியின் கெஞ்சாக அமையும் போது உயர்தினைப் பெண்பாலாகவும் பன்மையாற்கூறும் வழிப் tiலர் பாலாக

ଶଧୁu8 கொள்ளுதல்.