பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శః தொல்காப்பியம் - பொருளதிகாரம்

பொறியறிவும் வேறுபட நிறுத்தி அஃறிணை யிருபாற் கண்ணும் உயர்தினை மூன்று பொருளு முரியவாக; அவரவர் ஒட்டிய உறுப் புடையதுபோல் உணர்வுடையதுபோல் மறுத்துரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும் கூறுகின்ற அவரவர் தமக்குப் பொருந்திய உறுப்பெல்லாம் அதுவுடையது போலவும் உணர்வுடையது போல வும் மறுமாற்றந் தருவதுபோலவும் தந்நெஞ்சொடு புணர்த்துச் சொல்லியும்; சொல்லா மரபினவற்றொடு கெழி இச் செய்யாமர பிற் றொழிற்படுத்து அடக்கியும் வார்த்தை சொல்லா முறைமை புடையனவாகிய புள்ளும் மாவும் முதலியவற்றோடே அவை வார்த்தை கூறுவனவாகப் பொருந்தி அவை செய் த லாற்றாத முறைமையினையுடைய தொழிலினை அவற்றின் மேலே ஏற்றியும்; உறுபிணி தமபோலச் சேர்த்தியும்-அச்சொல்லா மா பினவை உற்ற பிணிகளைத் தம் பிணிக்கு வருந்தின போலச்சார்த்திக்கறியும்; உவ மம் ஒன்றிடத்து உவமவாயிற்படுத்தலும் அம் மூவகைப்பொருளை உவமஞ்செய்தற்குப் பொருந்துமிடத்து உவமத்தின் வழியிலே சார்த் திக்கூறுதலும்; இருவர்க்கும் உரிய பாற் கிளவி அத் தலைவர்க்குந் தலைவியர்க்கு முரிய இலக் கணத்திற் பக்கச் சொல் (எ று ,

தெரிய விளங்க உரியவாகப் புணர்த்தும் அடக்கியுஞ் சேர்த் தும் அவற்றைப் படுத்தலும் இவ்விருவர் க்குமுரிய பாற்கிளவியென முடிக்க. அவரவ’ ரென்கின்றார், அகத்திணையியலுட் பலராகக் கூறிய தலைவரையுந் தலைவியரையும். இருவ’ ரென்றதும் அவரென்னுஞ் சுட்டு. நெஞ்சென் னும் அஃறிணை யொருமையைத் தெரியவிளங்கத் தலைவன் கூறும்வழி உயர்திணையாண்பாலாகவுந் தலைவி கூறும்வழி உயர்திணைப்பெண்பா லாகவும் பன்மையாற் கூறும்வழிப் பன்மைப்பாலாகவுங் கொள்க. என்றுஞ்சொல்லா மரபினவற்றையும் உயர்தினைப் பாலாக்கியும் அவற்றைத் தம போலச் சேர்த்திக் கூறுபடுத்து உயர்திணை முப்பாலாக்கியுங் கூறுபவென வழுவமைத்தார். இருவகை நிலைக்களத்து எட்டனை யுஞ் சேர்க்கப் பதினாறாம். அவற்றை நெஞ்சொடு சேர்க்கப் பலவா மென்றுணர்க.

உண்ணாமையின் என்னும் (123) அகப்பாட்டினுள்,

1. இருவகை கிலைக்களமாவன கோபும் இன்பமும். எ ட்டென் பல ககை

முதலிய எண்வகை மெய்ப்பாடுகள்.