பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல் நூறபா உ துஇ

'இறவொடு வந்து கோதையொடு பெயரும்

பெருங்கடல் ஒதல் போல ஒன்றிற் கொள்ளாய் சென்று தரு பொருட்கே'

என்றவழி அழிதக வுடைமதி வாழிய நெஞ்சே ' என்றதனான் நிலையின்றாகுதியென நெஞ்சினை உறுப்புடையது போலக் கழறி தக்குரைத்தவாறும் ஒதத்தையும் நெஞ்சையும் உயர்திணையாக்கி உவமவாயிற்படுத்தவாறுங் காண்க.

'கைகவியாச் சென்று...நெஞ்சே." (அகம்.9)

ஃது,உறுப்புடையதுபோல் உவந்துரைத்தது.

క్ష్ తీ.శ్రీ ఓ ఓ

'அன்றவ னொழிந்தன்று மிலையே' என்னும்(19) அகப்

உாட்டினுள்,

'வருந்தினை வாழியென் நெஞ்சே பருந்திருந்

துயாவிளி பயிற்றுமி யாவுயர் தனந்தலை உருள் துடி மகுளியின் பொருள் தெரிந் திசைக்கும் கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம் எம்மோ டிறத்தலும் செல்லாய் பின்னின்று ஒழியச் சூழ்ந்தனை யாயின் தவிராது செல்லினிச் சிறக்கநின் னுள்ளம்’

என அறிவுடையதுபோல் அழுகைபற்றிக் கூறிற்று.

'பூவில் வறுந் தலை போலப் புல்லென்

றினைமதி வாழிய நெஞ்சே' (குறுந்.19 ;

என்றது உணர்வுடையதுபோல் வெகுளிபற்றிக் கூறிற்று.

உள்ளம் பிணிக்கொண்டோள்வயி னெஞ்சஞ் செல்லல் தீர்கஞ் செல்வா மென்னும் செய்வினை முடியா தெவ்வஞ் செய்தல் எய்யா மையோ டிளிவுதலைத் தருமென உறுதி தாக்கத் துரங்கி அறிவே - சிறிதுநனி விரையல் என்னும் ஆயிடை ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல