பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது தொல்காப்பியம் - பொருளதிகாரம்

'ஒங்செழிற் கொம்பர் நடுவி தெனப்புல்லும்" என்றாற்போல உயர்திணையாக உவமவாயிற்படுத்த பெருந் திணையாய் வருவனவுங் காண்க. இஃது அவலம்.

ஆய்வுரை . இஃது அகப்பொருளொழுகலாற்றில் ஒழுகுவோர் பால் இடம்பெறும் ஒரு சார் பொருள் வகை பறறிய கிளவிகளை வகுத்துக் கூறுகின்றது.

(இ-ஸ்) துன்பமும் இன்பமுமாகிய இரு வகை நிலையினை யும் உடைய காமத்தைக் கருதிய இயல்பு புலனாக எண்வகை மெயப்பாடுகளும் விளங்கப் பொருந்திய உறுப்புடையது போல வும் உணர்வுடையதுபோலவும் தனது கூற்றினை மறுத்துரைப்பது போலவும் தமது நெரு சொடு சோததுக் கூறியும், பேசும் ஆற்ற வில்லாத பறவை விலங்கு முதலியவற்றொடு பொருந்தி அவை செய்யாதனவற்றைச் ச்ெயவனவாகத் தொழிற்படுத்திக் கூறியும் பிறருற்ற பிணியைத் தமபொருட்டு நேர்ந்ததாகத் தம் மொடு சேர்த்தும், அறிவையும் அறிதற்கு வாயிலாகிய பொறிபுலன்களை யும் தமக்கு வேறுபடநிறுத் தி அஃறிணை இருபாற்பொருள்களும் உயர்திணைமுப்பாற் பொருள்களின் பண்புக்குந்தொழிலுக்கும் உரியனவாக உவமம் பொருந்துமிடத்து உவமங் கூறுதலும் தலை வன் தலைவியென்னும் காதலரிருவர்க்கும் உரிய ஒரு கூற்றுச் சொல்லாம். எ~று

நோய்-துன்பம். காமம் கண்ணிய-காமவுணர்வினை க் குறித்த, இடை தெரிதல்-இடையீடுபடுதல். எட்டன் பகுதி-நகை முதலிய எண் வகைமெய்ப்பாடுகள். ஒட்டியவுறுப்பு என்றது, முதலுளுசினையுமாகப் பிரிவின்றிப் பொருத்திய வுறுப்புக்களை . தெஞசமாகிய அகக் கருவிக்கு வினைமுதலாந் தன்மையும் கைகால முதலியவுறப்புக்களும், உயிரின தூண்டுதலின்றித் தானே யுனரும உணர்வும, தன்னைக கருவியாகச் செயற்படுத்துவோர் கூறிய வறுறை மறுத்துரைக்குந் திறனும் இல்லையானாலும், காமத தின வயப்பட்டகாதலர்கள் தம்முடைய நெஞ்சத திற்குக் கைகால் முதலிய உறுப்புககளும் தானே புணரும் உணர்வும பிராகூற்றுக்களை மறுத் துரைக்கும் உரைத் திறமும் உள்ளன போலத தமக்குள் கூறிக் கொள்ளுதல் உலகியலில வழங்கும் சொற் பொருள் மரபாகும் என்பதனைப் புலப்படுததும் நிலையில் அமைந்தது. ஒட்டிய வுறுப் புடையதுபோல உணர்வுடையது போல் மறுத்துரைப்பதுபோல் நெருசொடுபுணர்த்தும் எனவரும் தொடராகும்.