பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிபாருளிய ல;~ நூற்பா உ இ.இ

மக்கள் தம்முள் உரையாடு தற்குரிய மொழியிலே வார்த்தை சொல்லா மரபின வாகிய பறவை விலங்கு முதலிய அஃறினைப் பொருள்களை நோக்கி, அவை தமமைப்போன்று ஒரு வர் பாற் சென்று உரையாடுந் திறமுடையனவாகக் கொண்டு து தாக விடுதலும், தாம் ஏவிய பணிகளைச் செய்யும் செயற்றிறமுடையன வாகக் கொண்டு அவற்றைத தாம விரும்பிய பணிகளில் ஏவித் தொழிற்படுத்துதலும் ஆகிய இவை பகுதிதுணர்வுடையார் பால இடம்பெறுதல் பொருந்தாவாயினும், காமத் திணையிலொழுகும் காதலர் கூற்றுக்களில் இவை இடம் பெறுதல் இயல்பு எனபது புலப்பட சொலலாமரபினவற்றொடு கெழி இச் செய்யாமரபிற் றொழிற்படுத்தடக்கியும்’ என்றார் ஆசிரியர். கெழுவுதல்-அன்பு கர்ந்து நண்பாய்ப பொருந்திப் பழகுதல் தொழிற்படுதது அடககு தலாவது தாம் ஏவிய பணிகளை அவை செய்வன வாகத் தம் முள்ளத்து உறுதியாகக் கொள்ளுதல்.

தம்மாற் காணப்பட்ட உயிர்ப்பொருள் உயிரல்பொருள் களின் இயல்பினைக் குறித்துக் காதலராய தமது துன்பங்கண்டு அவை துயரமுற்றனவாக எண்ணி வருந்துதலுங் காமமுற்றார். இயலபு என்பது புலப்படுத்துவார், 'அவரவருறுபிணிதம போற் சேர்த்தியும்' என்றார். அறிவு என்றது, உயிரினது மன அறிவினை. புலன் என்றது அவ்வறிவினால் ஐம்பொறிவாயிலாக அறியப்படும் பொருள்களை. வேறுபடி நிறுத்தல் என்றது, உவமையும் உவமிக் கப்படும் பொருளும் தம்முள் மாறித் தோன்றுமாறு அமைத்தல். "இரு பெயர்’ என்றது ஒன்றன்பால் பலவின் பால் எனப்பகுதிதுரைக் கப்படும அஃறிணைப்பொருள்களை மூன்று' என்றது ஆண்பால் பெண்பால் பலர்பால் எனப்பகுத்துரைக்கப்படும் உயர்தினைப் பொருள்களை பெயர் -பொருள் இருபெயர்மூன்றும் உரியவாத லாவது, அஃறிணை யிருபாற் பொருள்களும் உயர்திணை முப்பாற் பொருள்களின் தன்மைக்கும் தொழிற்கும் உரிய வாதல், இரு பெயர் மூன்றுக்கும் உரியவாத எனக் குவ்வுருபு விரித்துப்பொருள் கொள க.

இருவர் என்றது. காமுற்றார் இருவரை. பாற் கிளவி என்றது. உலகியலில் உணர்வுடையார் எல்லார்க்கும் உரியகற்றா காது காமமிக்க ஒருவன் ஒருத்தியாகிய காதலர் இருவர்.பால் மட்டுமே நிகழ்தற்குரிய கூற்றுவகையினை .

பன் ஸ்-பக்கம் கிளவி-கூற்று.