பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

签一

. தொல்காப்பியம் பொருளதிகாரம்

இாம் பூரணம் :

என்-எனின் . நற்றாய்க் குரியதோர் மரபு உணர்த்திற்று.

(இ-ன். மேற்சொல்லப்பட்ட கனவு தாய்க்கும் உரித்து, உடன் போக்குக் கிளக்கப்பட்டுழி என்றவாறு."

உ-ம் : "கண் படை பெறேன் கனவ’ (அகம் இடு} என வரும். வேறும் வந்தவழிக் காண்க. (g)

தக்சினார்க்கினியம் :

இது முற்கூறிய க எ களவின்கட் செவிலிக்கு முரித்தென வழுவமைக்கின்றது. .

(இ-ன்.) - உடன்போக்குக் கிளப்பின்-உடன்போக்கின் கிட் கூறின், தாய்க்கும் உரித்தால்-அக்கனவு செவிலிக்கும் உரித் தாயிருந்தது முந்து நூற்கண் (எ.ற)

தோழி உடன் பட்டுப் போக்குதலானும் தற்றாய் நற்பாற் பட்டனன்' என்று வருதலானுந் தாயெனப்படுவோள் செவிலியா கும்.(124)" என்பதனானுஞ் செவிலியைத் தாயென்றார். தலைவி போகாமற் காத் தற்குரியளாதலானும் அவளை என்றும் பீரியாத பயிற்சியானுஞ் செவிலிக்குக் கனவு உரித்தாயிற்று.

காய்ந்துசெலற் கனலி" (அகம். 55) என்பதனுட் கண் படை பெறேன் கனவ’ என்றவாறு காண்க.

ஆய்வுரை: இது தாய்க்குரியதோர் இயல்பு கூறுகின்றது.

'இவள்) தன்மகள் காதலனுடன் சென்றாள் என உடன் போக்குப் பேசப்பட்ட நிலையில் நற்றாய்க்கும் கனாக்காண்டல உரித்து. எ-து.

உடன்போக்குக் கிளப்பின் தாய்க்கும் கனவு உரித்து என்க. உரித்து என்னும் பயனிலைக்கு எழுவாயாக மேலைச் சூத்திரத் திலுள்ள கனவு என்பது அதிகாரத்தான்.வந்தியைந்தது.

1. உட்ன்போக்குக் கிளப்பின் கனவு தாய்க்கும் உரித்து, என மேலைச் குத்திரத்திலுள்ள 'கனவு’ என்பதனை எழுவாயாக வருவித்துரைக்க.

2. கற்றாய் கற்பாற்பட்டன என்று வருதலானும் என்ற தொடரின் சதுப்பொருள் தெளிவாகப் புலப்படவில்லை.