பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் - நூற்பா டு ఫ్ల

டு பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே நட்பின் நடக்கை யாங்கலங் கடையே.

இளம்பூரணம் :

என்-எனின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதலுதவிற்று. (இ-ள்.) பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்து என்பது -பான்மை கெழுமப்பட்ட கிளவி .ெ பண்பாலா சாகிய நால்வர்க் கும் உரித்தென்றலாறு.

தால்வராவார்-தலைவி, தோழி, நற்றாய், செவிலி. அஃ தேல் தலைமகளை யொழிய மூவர் என்று அமையாதோ இானின் மேல் தலைமகட்கும் உரித்தென்றார் அவரொடு கூட நால்வர் என வகையறுத்தல் என்பது.

நட்பி னடக்கை யாங்கலங் கடையே என்பது-நட்பின் வழங்கும் வழக்கல்லாதவிடத்து என்றவாறு.

அஃதாவது, தலைவியொடு தோழி யொழுகும் ஒழுக்கம் அவ்வழியல்லாத விடத்தென்றவாறு ஆவண்மாட்டு நிகழ்வது தலை வன் தோழிக் குணர்த்தாது பிரிந்தவழி என்று கொள்ளப்படும். பாற் கிளவி என்பது பயிலாது வரும் ஒரு கூற்றுச்சொல் எனப்பட்டது. அதனைக் கெழுமிய சொல் பால்கெழு கிளவியாயிற்று. ஆண்டு நற்றாய் கூறியதற்குச் செய்யுள்:

கருமணற் கிடந்த பாவை என்

மருமகளேயென முயங்கினள் அழுமே.,, (அகம் கசுடு)

செவிலி கூறியதற்குச் செய்யுள் :

1. இந்நூற்பாவில் வரும் கால்வர் என்னுக்தொகைச்சொல், அடுத்து வரும் நூற்பாவில் உயிரும் காணும் மிடனும் என்னும் பெண்மைப் பண்பிற்குரியராகக் கறுப்படும் செயிர் தீர் சிறப்பின் கால்வராகிய பெண்பாலாரையே குறிக்கும் என்பார், "நால்வராவார் தலைவிதோழிகற்றாய் செவிலி' என விளக்கம் தந்தார் இளம்பூரணர்.

2. நட்பின் கடக்கை என்றது தலைவியொடு தோழியொழுகும் ஒழுக்கம் எனவும், ஆங்கலங்கடை" என்பது அவ்வழியல்லாதவிடத்து' எனவும், என்றது, தலைவன் தோழிக்கு உணர்த்தாது பிரிந்தவழி எனவும் விளக்கந்தருவர் இளம் பூரணர். எனவே தலைமகன் தோழிக்குத் தன் பிரிவினை புணர்த்தாது பிரிந்த துன்பக் காலத்து அவர் பாற் பால்கெழு கிளவி நிகழும் என்பது இளம்பூரணர் கருத்தேனக் கொள்ளவேண்டியுளது. இச் சூத்திரத்தின் இரண்டடிகனையும் இருவேறு சூத்திர மாகக் கொள்வர் கச்சினார்க்கினியர்.