பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翠、 தொல்காப்பியம் - பொருளதிகாசம்

அதத்தொடு நிற்ப, அதனைச் செவிலி உட்கொண்டு அவற்றைக் காத்து நற்றாய்க் கறத்தொடு நிற்ப, அவளும் அவற்றை உட் கொண்டு காத்தற்கு அறத் தொடு நிற்றலும் உடன் போய து அறனென நற்றாய் கோடலுஞ் செவிலி பிறரை வரைகின்றானோ வெனத் தோழியை வினவலும் பிறவுமாம். உதாரணம் முன் னர்க் காட்டியவற்றுட் காண்க.

இனி உம்மை ய முற்றும்மையாக்கி உயிர் முதலிய தலைவி புறுப்பினை உறுப்புடைத்தாகவும் மறுத்துரைப்பதாகவும் கூறப் பெறாதென்றார். .

ஆய்வுரை: இது, மேற்குறித்த பெண்பாலார் நால்வர்க்கும் உரிய பொதுவியல்பினை விரித்துரைக்கின்றது.

(இ~ள்) உயிரொத்த அன்பின் ஒரு மையும் உயிரினுஞ் சிறந்த நாணமும் மடனும் என்னும் இப்பண்புகள் குற்றமற்ற சிறப்பினை யுடைய பெண்பாலார் நால்வர்க்கும உரியனவாகும். எ-று.

இங்கு, உயிர் என்றது தமக்குள் உயிர் ஒன்றே என அன்பின் ஒருமையாற் பழகுதற் குரிய செயிர்திர்நட்பினை இந்நாலவரும் ஒருவரையொருவர் இன்றியமையாதவராய் ஒருயிர் போல்வர் என் பதும் இக்குணங்களுக்கு இழுக்கு நேராவண்ணம் கூற்று நிகழ்த்து வர் என்பதும் இச் சூத்திரத்தால நன்கு புலனாம் , .

எ. வண்ணத் திரிந்து புலம்புங் காலை

உணர்ந்தது போல உறுப்பினைக் கிழவி . புணர்ந்த வகையாற் புனர்க்கவும் பெறுமே.”

1. ‘இனி உம்மையை முற்றும்மையாக்கி, உயிர் முதலிய தலைவியுறுப்பினை உ துப்புடைத்தாகவும் மறுத்துரைப்பதாகவும் கூறப்பெறாதென்றார் என வரும் இத் தொடர் பொருள் தொடர்பின்றியும்:கோவும் துன்பமும் என்னும் நூற்பாவில் தலைவிக்குரிய வாகக் காட்டிய உதகரனச் செய்யுள்கட்கு முரண்பட்டும் காணப் படுகின்றது.

2. வண்ணம்-மேனியின் கிறமாகிய உடல் வனப்பு. திரிதல்-மெலிந்து வேறுபடுதல். ‘புலம்புறுங்காலை எனத்திருத்துக ‘புலம்பு-தனிமை, உணர்ந்தன. போல' என உரையிற்கானப்படுதலால் அதுவே இளம்பூரணர் கொண்ட பாடம் எனத்தெரிகிறது. புணர்ந்தவகையாவது, உறுப்புக்கள் தனிமையையுணர்தற்குப் பொருக்தும்வகை, புணர்ந்தவகையால் எனவே பிரிதலால் தனிமையுற்று வாட்டமுறுக் தன்மையவாகிய தலைவியின் தோள் முதலிய வுறுப்புக்களுக்கே உணர்ந்தபோலப் புணர்த்துக் கூறுதல் பொருத்தமுடையதாகும் என்பது புலன8 ம்.