பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் - நூற்பா எ బ్రీ.శ.

இளம்பூரணம் :

என்-எனின். தலைமகட்குரியதோர் பொருளுணர்த்திற்று. (இ-ள் தலைமகள் வண்ணம் வேறுபட்டுத் தனிமை யுறுங் காலைத் தலைமகன் பிரிவைத் தன் உறுப்புக்கள் உணர்ந் தன போலப் பொருந்தும் வகையாற் கூறவும் பெறும் என்றவாறு, -

உம்மை எதிர்மறை.

'தணந்தமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள்" (குறள்,கஉங்ங்} 'தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்

முன்னம் உணர்ந்த வளை' (குறள். கஉளள) என வரும், . . . ; - (எ) தச்சினார்க்கினியம், !

இது, வருத்தமிக்கவழி இவையுமா மென்கிறது.

( இ-ள்.) வண்ணம் பசந்து புலம்பு உறு.காலை-மேனி பசந்து தனிப்படருறுங் காலத்து: கிழவி உறுப்பினை உணர்ந்த போலதலைவி தனது உறுப்பினை அறிந்தனபோல; புணர்ந்த வகையிற் புணர்க்கவும் பெறுமே-பொருந்தின கூற்றாற் சொல்லவும் பெறும் 'எ. து..}

  • கேளல மைக்கவன் குறுகன்மி னென மற்றெந்

தோளொடு பகைபட்டு நினைவாடு நெஞ்சத்தேம்’ (கலி 68)

நாணில மன்றவெங் கண்ணே தாணேர்பு

• ~ ~ ~ ~ * * e tx - ~ ~ ~ ~ ~ ~ ~ ~ பிரிந்திசினோர் கழலே’’ (குறுந் 35 ) 'தணந்தமை சால அறிவிப்பு போலும் மணந்தநாள் வீங்கிய தோள்’’ (குறள். 1233)

என வரும் .

காதும் ஒதியும் முதலியன கூறப்பெறா; கண்ணுந் தோளும் முலையும் போல்வன புணர்க்கப்படுமென்றற்குப் புணர்ந்தவகை' வென்றார். இதனானே இவற்றைத தலைவன்பாற் செலவு வர வுடையனபோலக் கூறலுங்கொள்க.

1. புணர்ந்தவகையின் எனவே தலைவி தன்னுறுப்பினை உணர்ந்தன போலக் கூறுதற்குக் கண்ணுக்தோளும் முதலிய உறுப்புக்களே பொருத்தமுடையன எனவும் கூந்தலும் காதும் பொருத்தமில்லாதன எனவும் கொள்ளப்படும் என்பதாம்