பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல் - நூற்பா அ 成&

உற்றன. கொல் எனின் அல்லது-இவை என்ன வருத்த முற்றன கொலென்று தனக்கு வருத்தமில்லதுபோலக் கூறினல்லது கிழத்திக் குக் கிழவோற் சேர்தல் இல்லை - தலைவிக்குத் தலைவனைத் தானே சென்று சேர்தல் இருவகைக் கைகோளினுமில்லை (எ று.)

இது, காதல்கூரவுங் கணவற்சேராது வஞ்சம்போறொழுன் கலின் வழுவாயினும் அமைக்க (எ . று.)

'எற்றோ வாழி தோழி முற்றுபு

கறிவளர் அடுக்கத்து இரவின் முழங்கிங் மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க் கலைதொட இழுக்கிய பூந்ாறு பலவுக்கனி வரையிழி யருவி உண்துறைத் தருஉங் குன்ற நாடன் கேண்மை மென்றோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே (குறுந் ஒரு

என்பதனுட் கேண்மை தோளை மெலிவித்ததாயினும் எனக்கு அமைதியைத் தந்தது: யான் ஆற்றவுந் தாம் மெலிதல் பொருந் தாதது எத்தன்மைத்தெனத் தலைவி தோழிக்குக் கூறியவாறு காண்க. 'கலைதீண்ட வழுக்கி வீழ்ந்த பழத்தை யருவி 3ణి వ్రాయ பயன்படுத்து நாடன்” என்ற தனானே அவரால் நஞ் சுற்றது இற் பிரிந்தேமாயினும் அவன் நம்மை வரைந்துகொண்டு இல்லறஞ் செய்வித்துப் பயன்படுத்துவ னென்பதாம் .

'கதுமெனத் தாநோக்கி’ (குறள். 1173) இதுவும் அது.

"ஒஒ இனிதே' (குறள் . 1176) இதுவும் இதன்பாற்படும்.

'இனிப்புணர்ந்த எழில்நல்லார் இலங்கெயிறு உறாஅலின்

நனிச்சிவந்த வடுக்காட்டி நாணின்றி வரினெல்லா துனிப்பேன் யான் என்பேன்மன் அந்நிலையே அவற்கானில் தனித்தே தாழுமித் தனியி னெஞ்சே." (கலி. 67)

இதனுள், யான் துணித்தல் வல்லேன், என் நெஞ்சிற்குத் தன்றன்மை யென்பதொன்றில்லை, ஈதென் னென்றலின் அவ்வாறு காண்க.

1. யான் தலைவனொடு ஊடல் மிகுதியால் பிரிந்திருக்கவல்ல உறுதியுடை யேன். எனது கெஞ்சத்திற்குச் சார்ந்த பொருளின் தன்மையதாவதன்றித் தன க் கெனத் தனித்தன்மையென்பதொன்றில்லை ; இதுவென்ன அறியாகை என்றவாறு.