பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல்-நூற்பா ) கடு

'அவ் வியானை வனப்புடைத் தாகலுங் கேட்டேன், ,

(கலித், க)ை

என்றவழி, பொய்கூறினான் என்னுங் கருத்தினளாகிக கூறு தலின் மடனழிதலாயிற்று.

கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி மதவுநடைச் செவிலி கையென் புதல்வனை நோக்கி நல்லோர்க் கொத்தனிர் நீயிர் இஃதோ செல்வர்க் கொத்தனம் யாமென மெல்லவென் மகன் வயிற் பெயர் தந் தேனே, , (அகம் உசுத்

என்றவழி வேட்கை தணிதலாகாதாள் அது தணியுந்துணையு முயங் காது, கவவுக்கை நெழ்ந்ததெனப் பெயர்தல் மடனழிதலாயிற்று'

நச்சினார்க்கினியம் :

இது, பெண்டிர்க்கியல்பாகிய மடமை யழிவதோர் வழு வமைக்கின்றது.

(இ-ள். தன்வயின் கரத்தலும் தலைவன் தலைவியிடத்தே புறத்தொழுக்க மின்றென்று பொய்கூறலும்; அவன் வயின் வேட் டலும்-அங்ங் ைங் கரந்து கூறிய தலைவன் கட் டலைவி விரும்பு தலும்; அன்ன இடங்கள் அல்வழி எல்லாம்-ஆகிய அவை போலும் இடங்களல்லாத இடத்தெல்லாம்; மடனொடு நிற்றல் கடன் என மொழிப-தலைவி மடமையுளளாகி நிற்றல் கடப்பாடென்று கூறுவர் புலவர் (எ-று.)

எனவே, இவ்வீரிடத்தும் மடனழிதலுடையளென வழு வமைத்தார். அது 'குதிரை வழங்கிவருவல், (கலி.96) என்று

1. தலைவனைக் கூடுதல் வேண்டும் எனத் தான் அவன்பாற் கொண்ட வேட்கை தணியாத நிலையினளாகிய தலைவி, தன் மனத்தெழும் வேட்கையினைத் தன் அறிவின் திறத்தால் வெளிப்படாது அடக்கிக்கொண்டு அவ்வேட்கை தணியு மளவும் தலைவனைக் க.டி முயங்காமல், அவன் தானே வந்து தன்னை க் கட்டிய கிலையிலும் விருப்பமில்லாதாள் போன்றிருந்து தன்னை இறுகத்தழுவிக் Qఉr - அவன் கை சிறிது கெகிழ்க்த அளவில், அவன் தன் பால் அன்பிலன் என்பதற்கு அக்கெகிழ்ச்சியே காரணமென்று சொல்லிச் சிறிது இடம் பெயர்ந்தாள் என்பது இங்கு எடுத்துக் காட்டிய அககானூறு உசா-ஆம் பாடலிற் குறிக்கப்பெற்ற கிகழ்ச்சியாகும். இவ்வாறு தலைமகள் அறிவின் திறம் புலப்பட நிகழ்ந்த இங்கிகழ்ச் சிக்கு அவட்கியல்பாகிய மடன் என்னும் பண்பின் * 3: . .

அழிவே காரணமாதலின் இது மடனழிதலாயிற்று.