பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல்-ந்ாற்பா கக. து :

ஆசிரியர். மடனொடு நிற்றர் குரிய வளாகத. தான' என்று இங்குக் கூறப்படுவாள் தலைவியேயிர்தலின் .தன் என்ற து அவ்ளையே குறிக்கும். வயின்-இடம். கரத்தல்-தலைவன் தான் செய்த தவற்றினை மறைத்தல். வேட்டல்-தலைவனை முயங்கு தல் வேண்டும் என்னும் வேட்கையுடையளாதல். அன்ன இடங் கள் அல்வழியெல்லாம்.மேற்குறித்த அதன்மையவ, ய இடங்களல லாத ஏனைய எல்ல்ா இடங்களிலும் வழி இடம். மடன் ஆவது, நிகழ்ந்தவற்றைத் தான் தெளிவாக அறிந்திருந்து அறியாதாள் போன்று தனது அ ரிவினைப் புலப்படுத்திக்கொள்ளாதிருக்கும் பண்பு மடன் அழிதலாவது, தலைமகள் தான் அறிந்தவற்றை மனத் தின்கண் அடக்கிக்கொள்ள்ாது அவற்றைக் கூற்றி ை லும் குறிப்பினாலும் வெளிப்படுத்தல்.

கக. அதத்தொடு நிற்குங் காலத் தன்றி

அறத்தியல் மரபில்ஸ் தோழி என்ப.

இளம்பூரணம்

இது, அறத்தொடு நிற்கு நிலைமரபு உணர்த்திற்று.

(இ. ௗ) தலைவி அறத்தொடு நிற்குங் காலத்தன்றித் தோழி தானே அறத்தொடு நிற்கும் மரபு இலள் என்றவாறு :

தலைவி அறத்தொடு நிற்குமாறு:

'வீழ்ந்த மாரிப் பெருந்தண் சாரற்

கதிர்க் கூதனத் தலரி நாறும் மாத்ர் வண்டின் நயவருந் தீங்குரல் மணநாறு சிலம் பின் அசுணம் ஒர்க்கும்

1. ^ அதை 'தாடு :றறலாவது, தலைமகள், அன்பிற் சிறந்தானொருவனைத் தனக்குரிய தலைவன்ாக் மன்த்திற்கொண்ட ஒருமையுணர் வினைத் தான் ஆருயிர்த் தோழிக்கு அறிவித்தலும், தோழி செவிலித்தாய்க்குத் தகுதியுடைய மொழிகளால் அறிவித்தலும் ஆகும். அறத்தொடு நிற்றல் என்னும் இத்தொடர்க்கு 'அறம் என் .தக்கது. தக்கதனைச் சொல்லி: நிற்றல்' எனவும் 'அறம் என்பது கற்பு التي لنا கற்பின் தலைகிற்றல்” எனவும் பொருள் விளக்கம் தருவர் இறையனார் களவியல்

இங்கு, அறத்தொடு கிற்குங்காலம் என்பது, தலைவி தோழிக்கு அறத்தொடு விற்குங்காலத்தினை என்பதும் 'அறித்தியல்மரபு இலள் என்றது, தலைவியின்

இசைவின்றித் தோழிதானே அறத்தொடு கிற்கும் முறைமையிலள் என்பதும் இளம்

பூரணர் உரிையாற் புலனாகும்.