பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல் - நூற்பா கங் சள

தகைய தலைவனுக்கே நம் தலைவியை மணஞ்செய்து கொடுத்தல் வேண்டும் என்னும் குறிப்புத் தோன்றக் கூறுதலும், தலைவியின் நோயினைத் தணித்தல வேண்டி வேலன் முதலியோரைக் கொண்டு வெறியாட்டு முதலிய நிகழ்ததியபொழுது அவை தலைவியின் வருத்தததைத தணித்தற்குரியன அல்ல எனக் கூறித தடுத்தல் வேண்டி அவர்கள பால சிலவறறை வினாவுதலும், தலைவன் யாதேனும் ஒரு காரணததை முன்னிட்டு வருங்கால் தன் கருததின்ரி இயல் பாகவே தலைமைகளை எதிர்ப்பட்டான் எனக் கூறுதலும், தலை மகனும் தலைமகளும் ஒருவரையொருவர் எதிர்ப்பட்டபொழுது நிகழ்ந்த நிகழ்ச்சியினை நிகழ்ந்த முறையே மெய்ம்மையாக எடுத் துக் கூறுதலும என இவ்வேழு வகையால் அறததொடு நிற்றல் நிகழும் என்பதனை த தொல காப்பியனார் இச்சூத்திரத்தால் விளங்க அறிவுறுததியுள்ளமை காணலாம்

இங்ங்ணம் தோழி அறததொடு நிற்குங்கால், தலைவியின் குடிப்பிறப்பிற்கும் செவிலியின் அறிவிற்கும் தலைவியின் நாணம் கற்பு முதலிய பெருமைக்கும் தனது காவலுக்கும் தலைவனுக் குரிய அறிவு நிதை, ஒர்ப்பு. கடைப்பிடியென்னும் பெருந்தன்மைக் கும் தவறு நேராதபடி இக் களவொழுக்கம் நிகழ்ந்த முறைமையினை முரண்பாடில்லாத மொழிகளால் செவிலிக்கு எடுத்துரைத்தல் மரபாகும என்பர் இறையனார் களவியலுரையாசிரியர்.

க. உற்றுழி யல்லது சொல்ல் லின்மையின்

அப்பொருள் வேட்கைக் கிழவியி னுணர்ப.

இளம் பூரணம் : என்-எனின். இது செவிலிக்குரியதோர் மரபுணர்த்திற்று.

(இ-ஸ்) காமம் மிக்கவழி யல்லது சொல் நிகழ்ச்சி யின்மை யின் தலைமகள் தான் கருதிய பொருண்மேல் வேட்கையைத் தலைமகள் தன்னானே யறிவர் என்றவாறு."

1. உற்றுழியல்லது-காமம் மிக்கவழியல்லது. சொல்லல் இன்மையின் - தலைமகள் பால் சொல்கிகழ்ச்சியில்லாமையால். அப் பொருள் வேட்கை எ :றது, தலைமகள் தான் கருதிய பொருளாகிய தலைமகன் மேற்கொண்டுள்ள வேட்கையினை. கிழவியின உணர்தலாவது, தலைமகளிடத்துள வாகிய உடல் மெலிவு முதலிய குறிப்புக்களால் உணர்ந்து கொள்வல்.