பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ቆ”። தொல் காப்பியம்-பொருளதிகாரம்

பன்மையிற் கூறினமையால் அவ்வுணர்ச்சி செவிலிக்கும், நற்றாய்க்கும் ஒக்கும் என்றவாறு :

இதனாற் சொல்லியது, அறத் தொடு நிற்பதன் முன்னம் செவிலி குறிப்பினான் உணரும் எனக் கொள்க."

"அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி' (அகம். சஅ)

என்றவழிச் செவிலி குறிப்பினாள் உணர்ந்தவாறு காணக. வேட்கை தோற்றத் தலைமகனில்லாத வழித் தோழிகூற்று நிகழும் அது 'காமர் கடும்புனல்" (கலித். க.க) என்னும் பாட்டினுள் காண்க. (கக.)

நச்சினார்க்கினியம் :

இது, மேல தற்கோர் புறனடை."

(இ-ள்) உற்றுழி' அல்லது சொல்லல் இன்மையின்-தலைவி பர்க்கு ஏதமுற்ற இடத்தன்றித் தோழி அவ்வாறு மறை புலப் படுத்துக் கூறாளாதலின்; அப்பொருள் ச்வட்கை கிழவியின் உணர்ப - அம் மல்றை புலப்படுத்துதல் விருப்பத்தைத் தலைவியர் காரணத்தால் தோழிய உணர்வர் (எ-று.)

'உணர்வ'ரென்று உயர்தினைப் பன்மையாற் கூறவே தலைவியருந் தோழி பரும் பல ரென்றார். கிழ வி" யென்றாரேனும் "ஒருபாற் கிளவி" (தொல் பொ. 222) யென்பதனாற் பன் மை யாகக் கொள்க. உயிரினுஞ் சிறந்த நாணுடையாள் (113) இது புலப்படுத்தற்கு உடம்படுதலின் வழுவாயமைந்தது.

و ب=حس-سسساس سعیحسیمه

1. உணர்ப எனப் பன்மையாற் கூறிைைமயால் இவ்வாறுணர்வோர் செவிலி: பும் கற்றாயும் என்பது புலனாம்.

2. தோழி தன்பால் அறத்தொடு விற்பதற்கு முன்னமேயே செவிலி குறிப் பினால் உணரும் என்பது இச்சூத்திரத்தாத் கூறப்பட்டது என்பது இளம்பூரணர் கருத்தாகும்.

8. தலைவியின் வேட்கைக் குறிப்புணர்ந்து அறத்தொடு கிற்றற்குரியளாக மேலே கூறப்பட தோழிக்குரியதோ ரியல்புணர்த்துவதாக இச் சூத்திரத்தினை கச் சினார்க்கினியர் பொருள் கொண்டமையால் இது மேலதற்கோர் புறனடை எனக் கருத்துரை வரைக்தார். - - -

4. உற்றுழி.துன்பமுற்றகாலத்து, உற்றுழியுதவியும் (புறம்) என இச்சொல் இப்ெ பின்றுள்ளமை காண்க. ஏ. தம். துன்பம்.