பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல்-நூற்பா கக. சக

இன்னுயிர் கழிவ தாயினும் நின் மக்ள் ஆய் மலர் உண்கண் பசலை காம நோயெனச் செப்பா தீமே." (அகம் 52)

என்றாற்போல்வனவே இலக்கணமென்பது மேலைச்சூத்திரத்தாற் கூறப (கச)

ஆய்வுரை: இது, செவிலிக்கும் நற்றாய்க்கும் உரியதோர் திறம் உணர்த்துகின்றது. (இ~ள்) காமவுணர்வு மிக்குத் தோன் ஏறிய வழியல்லது சொல் நிகழ்ச்சியிலலாமையால் அத்தகைய காதற் பொருள்பற்றிய தலைமகளது வேட்கையினை அவளது தோற்ற முதலியன பற்றிச் செவிலி முதலியோர் குறிப்பினால் உணர்வர்

எ-து,

"உணர்ப, எனப் பன்மையாற் கூறினமையால் இங்கனம் தலைமகளது மெய்வேறுபாடு கண்டு அவளது உள்ளத் தின் வேட் கையினைச் செவிலியும் நற்றாயும் தோழி அறத்தொடு நிற்கு முன்னரே குறிப்பினால அறிநது கொள்வர் என்பதாம். உற்றுழியல் வது-காமம் மிக்குத்தோன்றிய வழிய ல்லது. உறுதல்-மிகுதல். சொல்லல் இன்மையின்-அதனைக்குறித்துச் சொல்நிகழ்ச்சி தலை மகள்ப்ால தோன்றுதல் இல்லையாதலின. அப்பொருள் வேட்கை -தலைமகள் தான் கருதிய பொருள்மேற்கொண்ட வேட்கையினை., கிழவியின் உணர்ப-தலைவியின் குனஞ செயல் மாற்றங் களும் உடல் மெலிவும் முதலிய குறிப்புக்களால் செவிலியும் நற்றாயும் முன்னரே உணரப்பெறுவர். . -

தோழி செவிலி க த அரக தொடு நிற்பதன் முன்னமேயே செவிலி தலைமகளது களவொழுக்கத்தைக் குறிப்பினால் கூர்ந் துணர்ந்து. தலைமகள் பால தோன்றும் இவ்வேறுபாடு எதனா, லாயிற்று' எனத் தோழியை நோக்கி விண்வியறிவாள் என்பது இச்சூத்திரத்தால உணர்த தப்பெறுஞ் செய்தியாகும். - -

1. இச் சூத்திரத்திற்கு கச்சினார்க்கினியர் கொண்ட இப்பொருள் இவ்வியலில் ஆறத் தொடு கிற்கும் காலத்தன்றி அறத்தியல் மரபிலன் தோழியென்ப" Tr முன்னுள்ள சூத்திரத்திலேயே அமைந்து கிடத்தலானும் 'அறத்தியல் மச (سعربي) క్డు என்றாங்கு இந்நாற்பாவில் கிழவியின் உணர்வாள் என ஒருமைப்பாலாற் கூறாது 'கிழவியின் உணர்ப எனப்பலர் பாலாற் கூறுதலானும் இந்நூற்பா இனம் ஆாணர் கருதுமாறுபோன்று செவிலிக்கும் கற்றாய்க்கும் உரியதோர் மரபுணர்த்து கின்றதாகக் கொள்ளுதலே ஏற்புடையதாகும்.

மேலைச்சூத்திரமாவது செறிவும் நிறைவும் என அடுத்து வரும் நூற்பாவாகும்.