பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல்-நூற்பாகச திக

(இ - ள்.) செறிவும் - அடக்கமும்; நிறைவும் - மறைபுலப் படாமல் நிறுத்தும் உள்ளமும்': செம்மையும் . மனக்கோட்ட மின்மையும்; செப்பும் - களவின்கட் செய்யத் தகுவன கூறலும்: அறிவும் . நன்மைபயப்பனவுந் தீமை பயப்பனவும் அறிவித் தலும்; அருமையும் உள்ளக்கருத்தறிதலருமையும்; பெண் பாலான - இவையெல்லாம் பெண்பாற்குக் காரணங்கள் (எ . று.)

இவையுடையளெனவே மை றபுலப்படு த்தற்கு உரியளல்ல ளென்பது உம் அதனைப் புலப்படுத்தலின் முற்கூறியன வழு வமைத்தனவுமாயிற்று. இவை வருஞ்சூத்திரத்திற்கும் ஒத்த லிற் சிங்கநோக்கு." (கடு)

ஆய்வுரை: இது, செயிர்திர் சிறப்பின் நால்வர் என மேற்குறிக்கப் பெற்ற பெண்டிர்க்குரிய சிறந்த பண்புகளை விரித்துக் கூறுகின்றது.

(இ-ள்) அடக்கம், அமைதி, நேர்மை, உண்மையினை வற்புறுத்தும் சொல் வன்மை, திதொரீஇ நன்றின்பாலுய்க்கும் நல்லறிவு, பிறர்பாற் காணுதற்கரிய அருமை என்பன பெண்டிர்க் குரிய சிறப்பியல்புகளாகும் எ-று.

ஆகவே மேற்சொல்லிய அரத்தொடு நிலைவகையும் இனிக் கூறும வரைவு கடாதற்பகுதியும் ஆகியவற்றை உண்மைவகை யானும் புனைந்துரை வகையானும் கூறும் ஆற்றல் தோழி முதலிய பெண் பாலார்க் குண்மை இனிது புலனாம். செறிவு-அடக்கம். திறைவு-அமைதி , சால்பு. "நிரையும்’ என்பது நச்சினார்க்கினி யர் கொண்ட பாடம். நிறையெனப்படுவது மறை பிறரறியாமை” (கலி-கங்ங் ) என்பது இங்கு நினைக்கத் தக்கது.

உ0ன. பொழுதும் ஆறுங் காப்புமென் றிவற்றின் வழிவி னாகிய குற்றங் காட்டலும்

1. மற்ைபுலப்படாமல் கிறுத்தும் உள்ளமும் என வரும் உரைப்பகுதிகொண்டு இச்சூத்திரத்தில் கிறை யென்பதே கச்சினார்க் கினியர் கொண்டபாடம் என்பது கன்கு தெளியப்படும். கிறையெனப்படுவது மறை பிறரறியாமை: (卒码一*版s) என வரும் கலித்தொகைத் தொடரும் இங்குக் கருதத்தகுவதாகும். இளம் பூரணன் “நிறைவு’ எனப்பாடங்கொண்டு 'அமைதி” எனப் பொருள்வரைந்துள்ளமையும் இங்கு எண்னத் தகுவதாகும்.

2. இக் நூற்பா செவிலி தோழி முதலியோர் இயல்புரைப்பனவாக இதன் முன்னும் பின்னும் உள்ள சூத்திரங்களை கோக்கி கிற்றலின் சிங்ககோக்கு எனப் பட்டது.