பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல்-நூற்பா கடு டுக.

(இ - ள்.) பொழுதும் ஆறும் காப்பும் என்றிவற்றின் வழுவின்ஆகிய குற்றங் காட்டலும் - இராப்பொழுதும் அக்காலத்து வழியுங் கண்ணுறும் இடத்துள்ள காவலுமென்று கூறப்பட்டவை மூன்றினது பழையமுறையிற் பிறழுதலால் தலைவற்குளதாகிய குற்றத்தையுணர்த்தலும் :

இவை தலைவற்கு அச்சம் உளவாகக் கருதுதலும் அவனால் நிகழும் இன்பத்தைத் துன்பமாகக் கருதுதலும் உடையனவாயிற் றேனும் அன்புபற்றிக் கூறலின் அமைந்தது. அப்பொழுதிற் றலைவனது செலவுவரவு நிகழ்ந்துழியே இக்குற்றங் காட்டுவ தென்று கொள்க.

"மன்றுபா டவிந்து...............” (அகம் 128)

என்பது பொழுது வழுவுதலிற் குற்றங்காட்டியது.

'ஈர்ந்த னாடையை எல்லி மாலையை

சோர்ந்துவீழ் கதுப்பினாள் செய்குறி நீவரின் ஒளிதிகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர் களிறென ஆர்ப்பவர் ஏனல்கா வலரே.” (கலி. 52)

இது. காப்பினான் வழுவுணர்த்தியது,

தன்னை அழிதலும் - அவன் அக்காலத்து அவ்வழியில் தனியே வருதற்கு யான் ஏதுவாயினேன் எனத் தன்னை அழிவு படுத்துரைத்தலும் :

  • நீதவ றுடையையும் அல்லை நின்வயின்

ஆனா அரும்படர் செய்த . யானே தோழி தவறுடை யேனே.” (அகம், 72)

அவன் வரவினை உவவாது துன்பங்கூர்தல் வழுவாயினும், அதுவும் அவன்கண் அன்பாதலின் அமைத்தார்.

அவன் ஊறு அஞ்சலும் . அவ்வழியிடத்துத் தலைவ ற்கு வாகம் ஏதமஞ்சுதலும்:

'அஞ்சுவல் வாழி யைய ஆரிருள்

கொங்கியர் ஈன்ற மைந்தின் வெஞ்சின உழுவை திரிதருங் காடே"

இஃது, அவனைப் புலிநலியுமென்று அஞ்சியது.