பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இச தொல்காப்பியம்-பொருளதிகாரம்

"ஒருநாள் விழுமம் உறினும் வழிநாள்

வாழ்குவள் அல்லளென் றோழி' (அகம். 18) என்பதும் அது.

ஆறின்னாமையாவது, விலங்கு முதலியவற்றான் வரவிற்கு இடையீடு நிகழுமென் றஞ்சுதல் ஏத்தல், எளித்தலின் வேறா யிற்று. இது நன்குமதியாமையின் வழுவாயினும் அன்பு மிகுதி யான் அமைத்தார்.

இரவினும் பகலினும் நீ வரல் என்றலும் - இராப்பொழு தின்கண்ணும் பகற்பொழுதின்கண்ணுத் தலைவனைக் குறியிடத்து வருகவெனத் தோழி கூறலும் :

வல்வில் இளையரொ டெவலிச் செல்லாது

சேந்தனை செலீனே சிதைகுவ துண்டோ

பெண்ணை யோங்கிய வெண்மணற்படப்பை

அன்றில் அகவும் ஆங்கண் -

சிறுகுரல் நெய்தலெம் பெருங்கழி நாட்டே’ (அகம் . 120)

எனவும்,

பூவேய் புன்னையந் தண்பொழில் வாவே தெய்ய மணந்தனை செலற்கே’’ (அகம் 240)

எனவும் வரும்.

களவு அறிவுறுமென்று அஞ்சாது வருகவென்றலின் வழு வேனுந் தலைவி வருத்தம் பற்றிக் கூறலின் அமைத்தார்."

கிழவோன்றன்னை வாரல் என்றலும்-தோழியுந் தலைவியுற் தலைமை செய்துகொண்டு தலைவனை வாரற்க எனறு கூறுதலும் :

தலைமை வழுவேனும் அன்பான் அமைத்தார்.

1. வோவென்றலும் என்றிருத்தல்லேண்டும்

2. உரியபொழுது, வழி, காவல் இவற்றின் மாறுபட்டு இராப்பொழு தில் தலைவனது போக்கு வரவு நிகழ்ந்த நிலையிலேதான் இத்தகைய குற்றங்களைத் தோழி எடுத்துக்காட்டுவாள் என்பதாம். இங்கனக் தலைவன் அடிக்கடி வருவா னாயின் இ க்களவொழுக்கம் மலராலும் அறியப்படுமே என்று அஞ்சாது அவனை இரவினும் பகலினும் வா எனக்கூறுதல் குற்றமாயினும் அவன் வருவானாயின் தலைவியின் வருத்தம் தணியும் என்னும் கருத்தினாற் கூறுதலின் குற்றமாக து என அமைத்தார்.