பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல்-நூற்பா கசு இன

தள் போன்று தோழியின் கூற்று அமைதல். புரை என்பதற்குக் குற்றம் எனப்பொருள் கொண்டு புரைபடவந்த’ என்பதற்குக் "குற்றம் பொருந்தவந்த கூற்றுக்கள்’ எனக் கூறுதலும் சூத்திரக் கருத்திற்கு ஏற்புடையதாகும். இங்கனம் கூறுங்கால் பட’ என்பதற்குப் பொருந்த' என்பது பொருள்.

உ0.அ. வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தல்

மரீஇய மருங்கின் உரித்தென மொழிப.

இளம்பூரணம்:

என்-எனின். இதுவும் தலைமகட்குந் தோழிக்கும் உரிய தோர் இயல்புணர்த்திற்று.

(இ.ஸ்) வரைதல் வேட்கைப் பொருளாற் கூறுதலை மறுத் துப் பட்டாங்கு கூறிச்சொல்லுதல்' மருவிய பக்கத்தின் உரித் தென்றவாறு, மருவிய பக்கமாவது களவொழுக்கம் நீட்டித்த இடம். அவ்வழிப் பட்டாங்கு கூறுதலும் ஆம் என்றவாறு. எனவே, மேற்கூறியவாறு கூறுதல் மருவாதவழி என்றவாறாம்.

  • கொடிச்சி யின் குரல் கிளை செத் தடுக்கத்துப் பைங்குரல் ஏனற் படர்தருங் கிளியெனக் காவலுங் கடியுநர் போல்வர் மாமலை நாட வரைந்தனை கொண்மே.” (ஐங்குறு. உண்க)

எனவரும், (கசு)

நச்சினார்க்கினியம் :

இது, நடுவணைந்திணையல்லாத கைக்கிளை பெருந்தினை க் கட் படுவதோ வழுவமைக்கின்றது.

1. கிளந்தாங்குரைத்தல் என்பதற்குப் பட்டாங்குகடறிச் சொல்லுதல், எனப்பொருள் வரைந்தார் இளம்பூரணர். பட்டாங்கு கூறிச் சொல்லுதலாவது தலைவியும் தோழியும் தமது உள்ளக்கருத்தினை மறைத்தலின்றி உள்ளவாறே கெனிப்படக் கூறுதல்.

2, மரீஇயமகுங்கு - மருவியபக்கம்., என்றது, களவொழுக்கம் கீட்டித்து கிகழ்ந்த கிலையினை,

மேற்கூறியவாறு கூறுதல் என்றது, மேல் பகு-ஆம் குத்திரத்திற் கூறி. லாலு மறைத்துக்க முதலை.