பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.அ தொல்காப்பியம்-பொருள தி கார ம்

(இஸ் வேட்கை மறுத்து - தம் மனத்து வேட்கையை மாற்றி, ஆங்குக் கிளந்து உரைத்தல் - இருவரும் எதிர்ப்பட்ட விடத்துத் தாம் ஆற்றின தன்மையைப் புலப்படக் கூறி ஒருவர் ஒருவர்க்கு அறிவித்தல் மரீஇய மருங்கின் உரித்தென மொழிய புலனெறி வழக்கஞ்செய்து மருவிப்போந்த கைக்கிளை பெருந் திணைக்கண் உரித்தென்று கூறுவர் ஆசிரியர் (எ-று.)"

கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் (தொல்

அகத்.1) என அவை இருமருங்கும் நிற்றலின் ஈண்டு மருங்கென்றார்.

"" தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா

செய்வது நன்றாமோ மற்று. ’’ (கவி, 62 )

இஃது அடியோர் தலைவராயவழித் தலைவி வேட்கை மறுத்துணர்த்தியது.

'எறித்த படை போன் மடங்கி மடங்கி

நெறித்துவிட் டன்ன நிறையேரால் என்னைப் பொறுக்கல்லா நோய்செய்தாய் பொlஇ நிறுக்கல்லேன் நீ நல்கின் உண்டென் னுயிர்' (கலி. 94)

'உழுந்தினுந் தவ்வாக் குறுவட் டா நின்னின்

இழிந்ததோ கூனின் பிறப்பு ' (கலி. 94)

இவை, அடியோர் தலைவராக வேட்கை மறுத்துணர்த் தியது. பெருந்தினை.

எனை வினை வவாங்கினோர்க்கு வந்துழிக் காண்க. இவை கைகோளிரண்டன் கண்ணும் வழங்குதல் சிறுபான்மையுரித்தென்று அகத்திணைக்கட் கூறலின் வழுவமைத்தார். ஒன்றென முடித்த’ லான் மரீஇயவாறு ஏனையவற்றிற்குங் கொள்க !

1. அடியோரும் வினை வலரும் அகத்தினைத் தலைவராய்க் கள் வு கற்பு என்னும் இருவகைக்கை கோளிலும் சிறுபான்மை இடம் பெறுதல் உண்டென்பது.

"அடியோர் பாங்கிலும் வினை வலபாங்கினும் -

கடிவரையிலபுறத்தென்மனார் புலவர் (தொல். அகத்: 28) என அகத் திணையியலிற் கூறுதலால் வேட்கை மறுத்து ஆங்குங்கிளங்துரைத்தல் மரீஇயமருங் கின் உரித்து' என வழுவமைத்தார்.

2. கைக்கிளை பெருக்திணையல்லாத ஏனை அகத்திணைகட்கும் இவ்வாறு வேட்கை மறுத்துக்கிளங்துரைத்தல் ஒன்றென முடித்தல் என்னும் உத்தியாற்கொள்க என்ப்ார் ஒன்றென முடித்தலான் மீf இயவர் து'ஏனையவற்றிற்குங் கொள்க’ என்றார்