பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல் காப்பியம்-பொருளதிகாரம் پائے تاکہ

பங்குனி விழவின் வஞ்சியோ

டுள்ளி விழவின் உறந்தையுஞ் சித்தே ’’

இதனுட் பொருள் விரும்பியவாறுங் குன்றம் விரும்பிய வாறுங் காண்க. அடைபொருள். இவள் தும்பால் அடைதற்குக் காரணமாகிய பொருளென் க. (2.0)

ஆய்வுரை : இது, களவுக் காலத்துத் தோழிக்குரியதோர் இயல்புணர்த்துகின்றது.

(இ-ள்) தலைமகளைப் புரத தே செல்லவிடாது பெற்றோர் இற்செறித்துக்காக்கும் காவல் மிகுதிப்பட உள்ள நிலைமைக் கண் "எங்கள் சுற்ற ததார் தலைமகளைக் கொடுக.க இசையாமைக்குக் காரணம் பரிசப்பொருளை வேண்டியே எனத் தோழி தலைமகனை நோக்கிக் கூறுதலும் விலக்கத் தக்க தன்று (எ-று.)

காப்புக் கைம்மிகுதல் உண்மையான பொருள்' என மொழிதலும் வரை நிலையின்று என இயையும் காப்பு - காவல். கைம்மி குதல்-அளவுக்கு மேல் மிகுதல் அஃதாவது தலைமகளை ப் புறத்தே செல்லவொட்டாது சிறை போன்று மனை க் கண் செறித்துக் காத்தல். வரை நிலை-விலக்கும் நிலை

இனி, களவுக்காலததுத் தலைவனுக்குரியதோர் இயல் புணர்த்துவது இச்சூத்திரமெனக் கொண்டு, தலைமகளைத் தமர் காக்குங்காவல் மிகுதியுள்ள வழி பொருள் வயிற பிரிதல் வேண்டும் எனத் தலைவன் கூறுதலும் கடியப்படாது’ என இளம் பூரணர் கூறும் பொருளும் ஏற்புடையதேயாகும்.

உகடு. அன்பே அறனே இன்பம் நாணொடு துறந்த ஒழுக்கம் பழித்தன் றாகலின் ஒன்றும் வேண்டா காப்பி னுள்ளே.

நச்சினார்க்கினியம் :

இது, தோழி பொருளென மொழிதற்குத் தலைவியும் உடன் பட்டு நிற்றற்குரிய ளென்றலின் மேலதற்கோர் புறனடை.

1. இது காதலர்பால் இன்றியமையாது கிலைபெறுதற்குரிய அன்பு, அறம், இன்பம், காண் என்னும் பண்பினை யெண்ணாது மேற்குறித்தபடி தோழி பொரு ளென மொழிதலேயன்றிக்காவல் மிகுதியால் துன்புறும் தலைமகள் தோழி கூறும் கூற்றிற்கு உடம்படுதலும் குற்றமன்றாம் என வழுவமைக்கின்றது.